• Apr 19 2024

யாழில் வன்முறைக் குழுக்களை கண்ட இடத்தில் சூடு நடத்த கட்டளை பெறும் முயற்சியில் பொலிஸ்!

Sharmi / Jan 25th 2023, 9:50 am
image

Advertisement

சுன்னாகத்தில் நேற்றையதினம் சினிமா பாணியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம்  தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம், இரண்டு  வன்முறைக் குழுக்கள் இணைந்து  மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீவைத்து கொலை செய்ய முயற்சித்ததன் விளைவே சுன்னாகத்தில் இடம்பெற்ற நேற்றைய சம்பவம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை நேற்றைய வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  வன்முறைக் கும்பல்களின் பிரதான சூத்திர தாரிகளைக் கண்டால் துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவை பெறுவதற்கு பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது,

வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்ட நபரொருவர் தனது தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று முற்பகல் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்துள்ளார்.

அவர் காரில் வருவதாக அறிந்த மேலும் இரு வன்முறைக் கும்பல்கள் சிறையில் இருந்து வெளிவந்தவரை சுன்னாகத்தில் நடுவீதியில் வைத்துக் கொல்வதற்குத் திட்டமிட்டுள்ளது. காரை தீவைத்து எரிக்க வன்முறைக் கும்பல் பெற்றோலையும் எடுத்து வந்துள்ளது. 

காரை நடுவீதியில் வாகனத்தால் மோதி விபத்துக்குள்ளாக்கிய கும்பல் அதில் பயணித்தவர்களையும் தாக்கியுள்ளது.

எனினும் அவர்கள் தேடிவந்த நபர் அந்தக் காரில் இல்லை என அறிந்ததும் வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளது.

தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் முகத்தில் கறுப்புத் துணியணிந்து வந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட் டில் சுன்னாகம் பொலிஸாரால் மருத்துவமனையில் வைத்து ஒருவர் கைது செய் யப்பட்டுள்ளார். அவர் மோதி விபத்தை ஏற்படுத்திய வாகனச் சாரதி என்று தெரிவிக்கப்பட்டது. 

இது. விபத்து என்ற ரீதியில் வழக்கை திசைமாற்ற எடுத்த நடவடிக்கை என பொலிஸ் மட்டத்தில் பேசப்படுகிறது.

இதேவேளை. வன்முறைக் கும்பல்களின் அடாவடி அதிகரித்துள்ளதால் பொலிஸ் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் வன்முறையில் ஈடுபடுவோரை கண்ட இடத்தில் சூடுநடத்துவதற்கான கட்டளையைப் பெறுவது தொடர்பில் பொலிஸ் உயர்மட்டம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







யாழில் வன்முறைக் குழுக்களை கண்ட இடத்தில் சூடு நடத்த கட்டளை பெறும் முயற்சியில் பொலிஸ் சுன்னாகத்தில் நேற்றையதினம் சினிமா பாணியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம்  தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சம்பவம், இரண்டு  வன்முறைக் குழுக்கள் இணைந்து  மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீவைத்து கொலை செய்ய முயற்சித்ததன் விளைவே சுன்னாகத்தில் இடம்பெற்ற நேற்றைய சம்பவம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.அதேவேளை நேற்றைய வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  வன்முறைக் கும்பல்களின் பிரதான சூத்திர தாரிகளைக் கண்டால் துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவை பெறுவதற்கு பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று நள்ளிரவு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது,வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்ட நபரொருவர் தனது தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று முற்பகல் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்துள்ளார்.அவர் காரில் வருவதாக அறிந்த மேலும் இரு வன்முறைக் கும்பல்கள் சிறையில் இருந்து வெளிவந்தவரை சுன்னாகத்தில் நடுவீதியில் வைத்துக் கொல்வதற்குத் திட்டமிட்டுள்ளது. காரை தீவைத்து எரிக்க வன்முறைக் கும்பல் பெற்றோலையும் எடுத்து வந்துள்ளது. காரை நடுவீதியில் வாகனத்தால் மோதி விபத்துக்குள்ளாக்கிய கும்பல் அதில் பயணித்தவர்களையும் தாக்கியுள்ளது.எனினும் அவர்கள் தேடிவந்த நபர் அந்தக் காரில் இல்லை என அறிந்ததும் வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளது.தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் முகத்தில் கறுப்புத் துணியணிந்து வந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட் டில் சுன்னாகம் பொலிஸாரால் மருத்துவமனையில் வைத்து ஒருவர் கைது செய் யப்பட்டுள்ளார். அவர் மோதி விபத்தை ஏற்படுத்திய வாகனச் சாரதி என்று தெரிவிக்கப்பட்டது. இது. விபத்து என்ற ரீதியில் வழக்கை திசைமாற்ற எடுத்த நடவடிக்கை என பொலிஸ் மட்டத்தில் பேசப்படுகிறது.இதேவேளை. வன்முறைக் கும்பல்களின் அடாவடி அதிகரித்துள்ளதால் பொலிஸ் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் வன்முறையில் ஈடுபடுவோரை கண்ட இடத்தில் சூடுநடத்துவதற்கான கட்டளையைப் பெறுவது தொடர்பில் பொலிஸ் உயர்மட்டம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement