எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கேப்டனுக்கு பிணை

170

கொழும்பு துறைமுக எல்லைக்கு உட்பட்ட கடற்பகுதியில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கேப்டனை, 20 இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ரஷ்ய நாட்டவரான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கேப்டன் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றினால் பயணத் தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.

கப்பல் தீப்பற்றிய விவகாரம் தொடர்பில் இன்று பிற்பகல் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கேப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவர் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: