தனக்கு கிடைத்த பாசிட்டிவ் விசயங்களை மட்டுமே ஹைலைட் பண்ணி ரசிகர்களின் அன்புக்கு நன்றி, கல்லடி கிடைக்கும்னு நினைச்சேன், அன்படி கிடைச்சிருக்கு சீக்கிரமே லைவ் வருகிறேன் என்று கூறி அவர் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் ரன்னர் அப்பாக வெற்றி பெற்ற பாலாஜிக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
6 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடம் பெற்றார்.
கமல்ஹாசன் பாலாவின் கரங்களாலே ஆரிக்கு வெற்றி கோப்பையை கொடுத்தது பாலாவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
தற்போது மரண குத்து நடனத்துடன் மேள தாளத்துடன் ஆட்டம் போட்டு வீட்டுக்குப் போகும் வீடியோ வைரலாகி வருகிறது.
பாலாவின் அண்ணன் பிக் பாஸ் கிராண்ட் பினாலேவிலும் வந்து அவருக்கு சப்போர்ட் செய்தார்.
பாலா வீட்டுக்கு வரும் போது மட்டுமின்றி, அவரது ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு வரும் போது, ரசிகரின் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து பாலாவை வரவேற்றதும், ஆரத்தியை எடுத்தவர்களிடம் பாலா அதை நான் கொட்டட்டா என கலகலப்பாக பேசிய வீடியோவும் பாலாவின் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாஜி முருகதாஸின் ரசிகர்களாக மாறியுள்ளனர்.
ஏகப்பட்ட இளம்பெண்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததில் இருந்தே பாலாவின் ரசிகைகளாக மாறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரசிகர் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பாலா, அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்து அவரை சந்தோஷப்படுத்தும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
பிற செய்திகள்:
- ஹேமந்தால் கர்ப்பமான பிரபல பெண் தொகுப்பாளினியின் கரு கலைப்பு;ஒட்டு மொத்த கதைக்கும் புதிய திருப்பம்!
- ‘நீ பத்தினி என்றால் செத்து நிரூபி’ சித்ராவை கடிந்து குதறிய ஹேமந்த்!
- தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திடீரென என்ன ஆனது? ஏற்பட்டுள்ள குழப்பம்!
- சித்ரா மீண்டும் வருகிறாள்; வெளியான புதிய அறிவிப்பு!
- செம்பருத்தி கார்த்திக் வெளியிட்ட பதிவு-கெஞ்சி அழைக்கும் ரசிகர்கள்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்