• Apr 20 2024

ஊடகங்களுக்கு தடை: பொலிஸ் மா அதிபர் பிறப்பித்துள்ள உத்தரவு! SamugamMedia

Tamil nila / Mar 20th 2023, 1:49 pm
image

Advertisement

நாட்டின் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.


இதற்கமைய, நடத்தப்படும் சோதனைகள், நடவடிக்கைகள், சந்தேக நபர்களை விசாரணை செய்தல், கைது செய்தல் போன்றவற்றை ஊடகங்களில் காணொளிகளாக மற்றும் படங்களாக வெளியிடுவதைத்  தடை செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.


அண்மையில் மட்டக்களப்பு ரயிலில் குழந்தையொன்றை கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில்  கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட காணொளி காட்சிகள் அனைத்து பிரதான ஊடகங்களிலும் பரவியதையடுத்தே  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபரை விசாரணை செய்யும் விதம் ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்தப்படுவதால், சந்தேக நபருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதுடன் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என்பதால், ஊடக குழுவை சோதனை நடவடிக்கைகளின்போது  அழைத்துச் செல்வதை நிறுத்துமாறு பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

ஊடகங்களுக்கு தடை: பொலிஸ் மா அதிபர் பிறப்பித்துள்ள உத்தரவு SamugamMedia நாட்டின் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.இதற்கமைய, நடத்தப்படும் சோதனைகள், நடவடிக்கைகள், சந்தேக நபர்களை விசாரணை செய்தல், கைது செய்தல் போன்றவற்றை ஊடகங்களில் காணொளிகளாக மற்றும் படங்களாக வெளியிடுவதைத்  தடை செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.அண்மையில் மட்டக்களப்பு ரயிலில் குழந்தையொன்றை கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில்  கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட காணொளி காட்சிகள் அனைத்து பிரதான ஊடகங்களிலும் பரவியதையடுத்தே  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபரை விசாரணை செய்யும் விதம் ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்தப்படுவதால், சந்தேக நபருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதுடன் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என்பதால், ஊடக குழுவை சோதனை நடவடிக்கைகளின்போது  அழைத்துச் செல்வதை நிறுத்துமாறு பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement