தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவானது மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா அணி

பாடசாலைகளுக்கிடையிலான கிழக்கு மாகாண எல்லே போட்டியில் மாகாண மட்டத்தில் 1 ஆம் இடத்தினை பெற்று மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம் தேசிய மட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.

குறித்த வெற்றிக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள், பயிற்றுவிப்பாளர் நிலக்சன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜெயப்பிரபா ஆகியோருக்கு மலர் மாலை அணிவித்து அதன் பின்னர் வாகனத்தில் பேரணியாக பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த பாடசாலை வீரர்கள் கடந்த 19,20 ஆம் திகதிகளில் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற மாகாணமட்ட போட்டியில் கலந்துகொண்டு முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை