மட்டகளப்பு துறைமுகம் எப்போது இறங்கு துறைமுகமாக மாற்றப்படும்?

243

கிழக்கு தமிழ் அரசியல் வாதிகள் கவனத்தில் கொள்வார்களா??
தங்களுக்குள் கட்சி சண்டையிட்டு இனத்தையும் அழித்து எமது வழங்களை தாரை வாற்கப்போகின்றீர்களா?
எமது மண்னையும் வழங்களையும் மக்களையும் முதலில் நேசியுங்கள்
கிழக்கு மாகாண வழங்களை பயண்படுத்தி வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப கனவுகானுங்கள் அதனை நிஜமாக்குங்கள்

உங்கள் தாயகத்தை பிறந்த இடத்தை மக்கள் எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள் நகரங்களை விருத்தியடைய சிந்தியுங்கள் எதிர்கால சிங்கப்பூராக அல்லது ஐரோப்பா போன்றாவது ஒரு நகரத்தை கட்டி எழுப்ப சிந்தணை செய்யுங்கள்.. பெருமை கொள்ளுங்கள் அரசியல் கட்சி வன்மத்தை விட்டு பொதுநலமாக சிந்தியுங்கள்
செயற்படுங்கள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள துறைமுகங்களில் திருகோணலை மட்டகளப்பு வாழைச்சேனை ஒலுவில் பிரபல்யமானவை.

இன்று ஒட்டு மொத்த கிழக்கு மாகாணத்திற்குமான ஒரு பாரிய துறைமுகமாக முஸ்லீம் அமைச்சர்களால் தங்களது இனத்திற்காக புணரமைத்து மத்திய கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து நேரடியாகவும் கொழும்பு துறை முகத்தினூடாகவும், வர்தகர்களுக்கும் ஏற்றுமதி செய்யவும் இறக்குமதி பொருக்களை தங்கள் சமுகம் பெற்று கொண்டு தொழில் வாய்ப்பை செய்யவும் வேலை வாய்ப்பை பெறவும் அமைக்கப்பட்டு இயங்கிவருகின்றது.

இதேபோன்று மட்டகளப்பிற்கு என்று நகரத்தில் ஏன் உருவாக்க முடியாது போனது??

வாழச்சேணை மீன் பிடி துறைமுகம் இதுவரை மீன்பிடி துறைமுகமாகவே உள்ளது ஏன் அபிவிருத்தி செய்யமுடியாமல் போனது ?இதே மண்னில் இதே பிரதேசத்தில் உள்ள அரசதரப்பு மட்டகளப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உள்ளனர் கவனத்தில் எடுத்து விரைவாக ஏற்றுமதி இறக்குமதி இறங்கு துறைமுகமாக அபிவிருத்தி செய்ய முன்வருவார்களா?

தற்போது தமிழரே துறைமுக அபிவிருத்தி அமைச்சர் உள்ளார்இந்த சந்தர்பத்தை இஸ்லாமிய சமுகம் பெற்று இருந்தால் முதலாவதாக அபிவிருத்தி பணிகள் அடைந்து நிறைவடைந்து இருக்கும் தமிழ் தலைமைகள் ஏன் சிந்திக்க கூடாது செயற்பட கூடாது ?

வாழைசேனை துறைமுகம்பற்றிய அறிமுகம்

வாழைச்சேனை (Valaichchenai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்தியப் பெருங்கடலில் புகழ் பெற்ற பாசிக்குடா கடற்கரை வாழைச்சேனை நகரில் இருந்து 3 கிமீ கிழக்கே அமைந்துள்ளது.

இந்நகரம் மட்டக்களப்பு நகரிற்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும் பொலன்னறுவைக்குக் கிழக்கே 70 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. கொழும்பு-மட்டக்களப்பு தொடருந்துப் பாதையும் ஏ-15 நெடுஞ்சாலையும் இந்த நகர் ஊடாகவே செல்கின்றன.

வாழைச்சேனையின் மேற்கிலிருந்து வடக்கு எல்லையாக, வாழைச்சேனை ஆறு எனப் பெயர்பெற்ற மதுறு ஓயாவின் வடிச்சல் செல்கிறது. வாழைச்சேனை ஆறு கிழக்கிலே பாசிக்குடாவின் வடக்கு முனையில் வங்காள விரிகடலுடன் இணைகின்றது.

தெற்கில் ஓட்டமாவடி எனும் முஸ்லிம் நகரம் உள்ளது. வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி இவ்வூரை இரண்டாகப் பிரிக்கின்றது. வாழைச்சேனை கிழக்கில் தமிழரும் மேற்குப் பிரதேசம் முழுவதும் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். வாழைச்சேனையின் கிழக்கு எல்லையாகப் பேத்தாழைக் கிராமம் உள்ளது.

வாழைச்சேனை ஆற்றுடன் இணைந்து தற்போது அமைக்கப்பட்டுள்ள மீன்பிடித்துறைமுகம் ஒரு காலத்தில் பிரபல்யம் பெற்று விளங்கியது. தபால்துறை அல்லது வங்களாத்துறை என அழைக்கப்பட்ட இவ்விடம் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் இடையிலான போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

பின்னர் ஆற்றின் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்ட ஓட்டமாவடிப் பாலம் புகையிரத மோட்டார்ப் போக்குவரத்திற்கு வழியமைத்ததால் நீர்ப்போக்குவரத்தின் தேவை நின்றுவிட்டது.

வாழைச்சேனையின் வெருகல், வாகரை தொடக்கம் தெற்கிலுள்ள வந்தாறுமூலை வரை உள்ள மக்கள் அனைவரும் வாழைச்சேனையுடன் தொடர்புள்ளவர்களாகவே விளங்குகின்றனர்.

இவர்கள் தமக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் தமது உற்பத்திப் பொருட்களை விற்கவும் வாழைச்சேனை சந்தையைப் பயன்படுத்துகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூல் பதிவில் இருந்து….

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: