முத்தமிடுவதால் மனிதர்களிடமுள்ள இந்த வலிகள் மறைந்துபோகும்! ஆய்வில் தகவல்!!

266

மனிதர்களுக்கு ஏற்படும் பல உடல்வலிகளுக்கும் காரணம் எண்டோர்பின் எனும் ஹோர்மோன் சுரப்பில் ஏற்படும் தளம்பல் நிலைதான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக மனத்தை இறுக்கமாக வைத்திருப்பதனால் பல வகைப்பட்ட வலிகளும் மனிதர்களை வந்து குடிகொள்கின்றன.

மகிழ்ச்சியாய் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் உடலிலுள்ள நரம்புகள் மற்றும் தசைகளின் சீரான இயக்கம் தொழிற்பட்டு உடல் வலிகள் பறந்தோடிவிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த மகிழ்ச்சி மனிதர்களிடம் வெளிப்படவேண்டுமாயின் எண்டோர்பின் ஹார்மோன் மூளையினைத் தூண்டவேண்டும்.

பொதுவாக மனிதர்களிடம் இடம்பெறும் முத்த பரிமாற்றங்கள் இந்த எண்டோர்பின் ஹார்மோனைச் சுரக்கச் செய்வதில் முக்கிய பங்காற்றுவதாக சமீபத்திய ஆய்வு கூறுகின்றது.

குறிப்பாக மனிதர்கள் காதல்வயப்பட்டு முத்தமிடுவதால் முதுகுவலி மாதவிடாய் காலத்து வலி மற்றும் தலைவலி என்பன பறந்தோடிவிடுவதாக புளோரிடாவில் இடம்பெற்ற ஆய்வு ஒன்று கூறுகின்றது.

குறிப்பிட்ட சில காதல் ஜோடியைத் தேர்ந்தெடுத்த ஆய்வுக்குழு அவர்களிடம் மேற்போன வலிகள் உள்ள சமயத்தில் முத்தமிட வைத்துள்ளனர். அதன்போது தம்மிடமிருந்த அந்த வலிகள் மாயமாக மறைந்ததாக குறித்த ஜோடிகள் கூறியிருக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: