நீரிழிவால் குழிப்புண் வந்து காலை வெட்டவிடாமல் காப்பாற்றும் ஆவாரை!

237

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களால் கால்களையே இழக்கவேண்டிய அவலங்கள் நிகழ்ந்துவருகின்றன.

ஆண் பெண் சிறியவர் பெரியவர் என்ற பேதமே இல்லாமல் நீரிழிவு இன்று அனைவரையும் கவ்விக்கொள்ளும் நோயாக மாறிவிட்டது. இயற்கை விவசாய முறையிலிருந்து மனிதன் என்று எல்லைமீறினானோ அன்றே நீரிழிவு உள்ளிட்ட தொற்றா உயிர்வழி நோய்கள் ஆட்டிப்படைக்கத்தொடங்கிவிட்டன. மனிதனின் அற்புதமான மரபணுக்கள் சிதைவடைந்து சின்னாபின்னமாகி பிறக்கின்ற குழந்தைகளில் கடுமையான தாக்கத்தைச் செலுத்தியுள்ளன.

நீரிழிவினால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளில் ஒன்றுதான் குழிப்புண் ஏற்படுதல். உண்மையில் குழிப்புண் என்பது மனிதர்களுக்கு ஏற்படும் ஒரு சாதாரண புண் தான். காயங்கள் மூலமாகவோ இயல்பாகவோ இந்த புண்கள் ஏற்படுகின்றன. இவை ஏற்படும் இடத்தைப் பொறுத்து இவற்றின் சுகமாகும் தன்மைகளும் மாறுபடும்.

பொதுவாக புண்கள் ஆறாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் இரத்த ஓட்டம் சீராக நடைபெறாமைதான். இரத்த ஓட்டம் சீராக நடைபெறாவிடில் குறித்த புண் உள்ள இடத்தில் பிறபொருள் எதிரிகளின் ஆதிக்கம் இன்மையால் நோயெதிர்ப்பு இல்லாமல்போய் அங்கே அழுகல் நிலை ஏற்படும். நாள்பட்ட புண்களிலிருந்து புழுக்கள் வெளியேறுவதும் இதனால்தான்.

விரலில் ஒரு குழிப் புண் ஏற்படுகின்றதாயின், இந்த குழிப் புண்களுக்கு மருத்துவாிடம் சென்றால், சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலை துண்டித்து விடுவதும், காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும் தற்போது நடந்துவருகிறது.

வேறு வழியில்லைத்தான். இதற்கு ஆங்கில மருத்துவத்திடம் மருந்து இல்லை. விரலையோ காலையோ எடுக்காதுபோனால் அந்த இடம் அழுகிப்போய் புழு உண்டாவதுடன் உடலின் ஏனைய பாகங்களுக்கும் நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் ஏற்படும்.

இதற்குத்தான் எம் முன்னோர்கள் கண்டுபிடித்த அற்புதமான தமிழ் வைத்தியம் உள்ளது. அதுதான் ஆவாரம் இலை.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக்கொண்ட மூலிகைகளில் ஆவாரை செடியும் ஒன்று. இதனுடைய இலையை அம்மியில், மிக்ஸியில் அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான கொட்டன் துணியினால் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும் என்கிறார்கள் இதிலிருந்து மீண்டெழுந்த மக்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: