கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் சிக்கிய பிக்கு!

தனது பயணப் பையில் வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றுகொண்டிருந்த பிக்கு ஒருவரை சுங்கப் பிரிவினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

அதாவது,தெஹியத்தகண்டிய, சிரிபுர பௌத்த மத்திய நிலையத்தைச் சேர்ந்த 58 வயதான பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பிக்கு, டோஹாவிலிருந்து கட்டார் விமான சேவையின் கியூ.ஆர்–654 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அத்துடன்,விமான பயணத்தில் நட்பு கொண்ட நபரொருவர், இந்த தங்க நகைகளை விமான நிலையத்துக்கு வெளியே எடுத்து வந்து தரும்படி தம்மிடம் ஒப்படைத்ததாக இந்த பிக்கு சுங்கப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சுங்கப் பிரிவினர் அந்த நபரையும் தேடி கைது செய்துள்ளனர். இந்தத் தங்க நகைகளை பறிமுதல் செய்த சுங்கப் பிரிவினர் பிக்குவை விடுதலை செய்து தங்க நகைகளை பிக்குவிடம் கையளித்த நபருக்கு 5 லட்ச ரூபா அபராதம் விதித்தனர்.

மேலும் பிக்குவிடமிருந்து 2 கோடி 49 லட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை