மாஸ்டர் திரைபடத்தை கையில் எடுத்த பிக் பாஸ்-ஏன் தெரியுமா?

354

தைத்திருநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட மாஸ்டர் திரைப்படம் தற்போது வரையிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் வெற்றிநடை போடுகிறது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அட்டகாசமான நடிப்பை பார்த்த ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை ராதிகா வீட்டில் நடந்த துயரம்-அடுத்தடுத்து நிகழும் மரணங்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் Endemolshine நிறுவனம் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளதாகவும், சினி ஒன் ஸ்டூடியோ மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோவுடன் இணைந்து பாலிவுட்டில் மாஸ்டரை உருவாக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாஸ்டர் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என்றும் விஜய் தி மாஸ்டர் என இந்தி மொழியிலேயே டப் செய்தும் ரிலீசானது.

இந்நிலையில், மீண்டும் ஏன் இந்தியில் மாஸ்டர் திரைப்படத்தை ரீமேக் செய்ய உள்ளனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பாலிவுட் ரசிகர்களை ஈர்க்கும் அளவுக்கு இரு பெரிய பாலிவுட் நடிகர்களை வைத்து மாஸ்டரை உருவாக்க முடிவு செய்துள்ளதாக எண்ட்மோல்ஷைன் இந்தியா நிறுவனர் அபிஷேக் ரேக் அறிவித்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள நிலையில், அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் என ஏகப்பட்ட நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

சீக்கிரமே ஜேடியாகவும் பவானியாகவும் மிரட்டப் போறது யார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: