ஒருவாறு பலரின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய ஆரி வெற்றிவாகை சூடிவிட்டார்.

பல கோடி மக்களின் நம்பிக்கை வெற்றி பெற்று விட்டது.

அதிகாரப்பூர்வமாக பிக்பாஸ் டைட்டிலை ஆரி இன்று வென்றே விட்டார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்சப் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி-இனியும் அச்சம் வேண்டாம்!

பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களால் அதிகம் நாமினேட் செய்யப்பட்ட ஆரி, இறுதிப்போட்டி வரை முன்னேறி டைட்டிலையும் தற்போது வென்று வெற்றிவாகை சூடி இருக்கிறார்.

சோம், ரம்யா, ரியோ, பாலாஜி, ஆரி என மொத்தம் 5 பேர் இறுதிப்போட்டியில் எண்ட்ரி ஆகினர்.

இதில் சோம் 5-வது இடத்தையும், ரம்யா 4-வது இடத்தையும், ரியோ 3-வது இடத்தையும் பிடித்தனர்.

கடைசியில் பாலாஜி, ஆரி இருவரையும் பிக்பாஸ் மேடைக்கு கமல் அழைத்து வந்தார்.

பெருவாரியான மக்கள் வாக்குகளை வென்ற ஆரி பிக்பாஸ் டைட்டிலை வெல்ல, பாலாஜி ரன்னர் அப்பாக தேர்வானார்.

பல கோடி வாக்கு வித்தியாசத்தில் பிக்பாஸ் டைட்டிலை வென்றது ஆரி தானா?தற்போது கிடைத்த தகவல்!

இந்த சீசனிலாவது மக்களின் ஓட்டுக்கள் அடிப்படையில் வெற்றி இருக்குமா? இறுதி நேரத்தில் விஜய் டிவியின் செல்லப் பிள்ளைக்கு வின்னர் அல்லது ரன்னர் அப் கொடுப்பார்களா? என ஏகப்பட்ட கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன.

ஆனால், கடந்த வாரமே அதிக ஓட்டு வித்தியாசத்தில் சேவ் செய்யப்பட்ட ஆரி மற்றும் பாலா இந்த வாரமும் அதே போல அதிக வாக்குகளுடன் வெற்றிப் பெற்று டைட்டில் மற்றும் ரன்னர் அப்பை வென்றனர்.

நேர்மை வென்றது என கமல் வாழ்த்தினார். 50 லட்சம் பரிசு பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் டைட்டிலை வென்ற ஆரிக்கு டைட்டில் வின்னர் கோப்பை மற்றும் 50 லட்சம் பரிசையும் கமல்ஹாசன் வழங்கினார்.

பாலாஜி முருகதாஸ் கையால் ஆரிக்கு கோப்பையை வழங்க வைத்தது ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. பாலா ஆரிக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: