நீதிமன்றுக்கு அருகில் கசிப்பு விற்றவர் கைது

80

கிளிநொச்சி நீதிமன்றுக்கு அருகில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக பொலிஸாரின் கண்ணில் சிக்காது சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட நிலையில், குறித்த சந்தேபநபர் கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்பு பிரிவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் மது ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 18 லீட்டர் கசிப்பு மற்றும் சாராயமும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: