தென்னிலங்கையில் வெடிப்புச் சம்பவம்; ஒருவர் பலி!!

332

இலங்கையின் தெற்கே அவிசாவளை – மாதொல பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

பழைய இரும்புப் பொருட்களை சேகரிக்கும் நிலையம் ஒன்றில் திடீரென இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக அறியமுடிகிறது.

இன்று ( 2) மாலை வேளையில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறுகையில்,

சேகரிக்கப்பட்ட பழைய இரும்பு பொருட்களை, ஊழியர் ஒருவர் எரிவாயுவை பயன்படுத்தி வெட்டும் போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் அவர் குறித்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 3 ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஊடாக சம்பவ இடத்தை பூரண ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Post Settings