• Mar 28 2024

சாய்ந்தமருதில் இடம்பெற்ற இரத்ததான முகாமும் சுதந்திர தின நிகழ்வும்!

Sharmi / Feb 4th 2023, 1:05 pm
image

Advertisement

தாய்நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சிலோன் மீடியா போரம், ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் ஆகியவற்றின் அனுசரணையில் "ஒரு துளி இரத்தம் பலரது உயிர் காக்கும்" எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாமும் சுதந்திர நிகழ்வும் (04) சனிக்கிழமை சாய்ந்தமருது வொலிவேரியன் கலாச்சார மத்திய நிலையத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.

சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம்.றிம்ஸான் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் கலந்து கொண்டார். 

இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி சஹ்பி எச்.இஸ்மாயில்,சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், கல்முனை வடக்கு  ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் தேவரஞ்சனி,  உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை கல்முனை வடக்கு  ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் தேவரஞ்சனி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

சாய்ந்தமருதில் இடம்பெற்ற இரத்ததான முகாமும் சுதந்திர தின நிகழ்வும் தாய்நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சிலோன் மீடியா போரம், ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் ஆகியவற்றின் அனுசரணையில் "ஒரு துளி இரத்தம் பலரது உயிர் காக்கும்" எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாமும் சுதந்திர நிகழ்வும் (04) சனிக்கிழமை சாய்ந்தமருது வொலிவேரியன் கலாச்சார மத்திய நிலையத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம்.றிம்ஸான் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி சஹ்பி எச்.இஸ்மாயில்,சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், கல்முனை வடக்கு  ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் தேவரஞ்சனி,  உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை கல்முனை வடக்கு  ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் தேவரஞ்சனி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement