• Sep 30 2024

காட்டில் விறகு வெட்டச் சென்ற நபர் சடலம் மீட்பு!! samugammedia

Tamil nila / Jul 30th 2023, 3:05 pm
image

Advertisement

புத்தளம் குருனாகல் வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் காட்டினுல் வயோதிபர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த காட்டுப் பகுதியில் விறகு வெட்டச் சென்ற ஒருவர் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த நிலையில் 11 9 தொலைப்பேசி அழைப்பு மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு 119 அழைப்பிற்கையமைய புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார்  சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டனர்.

பின்னர் குறித்த சம்பவ இடத்திற்கு பதில் கடமையாற்றும் நீதவான் இந்திக்க தென்னகோன் வருகைத் தந்து சடலத்தைப் பார்வையிட்டார்.

பின்னர் குறித்த சடலத்தை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்க உத்தரவிட்டுள்ளார்.

புத்தளம் தம்பபண்ணி வீதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.


காட்டில் விறகு வெட்டச் சென்ற நபர் சடலம் மீட்பு samugammedia புத்தளம் குருனாகல் வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் காட்டினுல் வயோதிபர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த காட்டுப் பகுதியில் விறகு வெட்டச் சென்ற ஒருவர் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த நிலையில் 11 9 தொலைப்பேசி அழைப்பு மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.இவ்வாறு 119 அழைப்பிற்கையமைய புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார்  சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டனர்.பின்னர் குறித்த சம்பவ இடத்திற்கு பதில் கடமையாற்றும் நீதவான் இந்திக்க தென்னகோன் வருகைத் தந்து சடலத்தைப் பார்வையிட்டார்.பின்னர் குறித்த சடலத்தை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்க உத்தரவிட்டுள்ளார்.புத்தளம் தம்பபண்ணி வீதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement