திருகோணமலை மட்டிக்களி கடற்கரையில் சடலம் மீட்பு

திருகோணமலை மட்டிக்களி கடற்கரையில் நபரொருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை – இலிங்கநகரை சேர்ந்த கர்ணா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா? அல்லது விபத்தா என்ற கோணத்தில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த நபர் மது போதைக்கு அடிமையானவர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை