• Sep 29 2024

நைஜீரியாவின் புதிய ஜனாதிபதியாக போலா டினுபு தெரிவு!SamugamMedia

Sharmi / Mar 1st 2023, 1:18 pm
image

Advertisement

நைஜீரியாவின் ஜனாதிபதித் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர்  போலா டினுபு வெற்றியீட்டியுள்ளார்.

நைஜீரியாவின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

2015ஆம் ஆண்டு முதல் ஆட்­சி­யி­லுள்ள ஜனா­தி­பதி மொஹம்­மது புஹாரி 2 தவ­ணை­கள் பதவி வகித்­ததால் அவர் இத்­தேர்­தலில் போட்­டி­யி­ட­வில்லை. அவரின் அகில முற்போக்கு காங்­கிரஸ் (ஏபிசி) கட்­சியின் சார்­பில் லாகோஸ் மாநில முன்னாள் ஆளுநர் போலா அஹ்மத் டினுபு (70) போட்­டி­யிட்டார்.

பிர­தான எதிர்க்­கட்­சி­யான மக்­களின் ஜன­நா­யகக் கட்சி சார்பில் முன்னாள் உப ஜனா­தி­பதி அதீகு அபூ­பக்கர் (76)  போட்­டி­யிட்டார். தொழிற்­கட்சி சார்பில் அனம்ப்ரா மாநில முன்னாள் ஆளுநர் பீட்டர் ஒபி (61)  போட்­டி­யிட்டார்.

ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­கு­வ­தற்கு ஏனைய வேட்­பா­ளர்­களை அதி­கூ­டிய வாக்­கு­களைப் பெறு­வ­துடன், 36 மாநி­லங்­களில் குறைந்­த­பட்சம் மூன்றில் இரண்டு பங்கு மாநி­லங்­களில், அதா­வது 24 மாநி­லங்­களில், 25 சத­வீ­தத்­துக்கு அதி­க­மான வாக்­கு­க­ளையும் பெற வேண்டும்.

ஆபி­ரிக்­காவின் அதி­கூ­டிய சனத்­தொ­கையைக் கொண்ட நைஜீ­ரி­யாவில் 22.5 கோடி மக்கள் உள்­ளனர். இவர்­களில் 9.3 கோடி பேர் வாக்­க­ளிப்­ப­தற்குத்  தகுதி பெற்­றி­ருந்­தனர்.

வாக்­கா­ளர்­களை அடை­யாளம் காண்­ப­தற்கு கைவிரல் மற்றும் முகம் அடை­யாள தொழில்­நுட்­பமும் முதல் தட­வை­யாக பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

இத்தேர்தலில் ஆளும் அகில முற்போக்கு காங்கிரஸ் (ஏபிசி) வேட்பாளர் வெற்றியீட்டியுள்ளார் என அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

நைஜீரியாவின் புதிய ஜனாதிபதியாக போலா டினுபு தெரிவுSamugamMedia நைஜீரியாவின் ஜனாதிபதித் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர்  போலா டினுபு வெற்றியீட்டியுள்ளார்.நைஜீரியாவின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.2015ஆம் ஆண்டு முதல் ஆட்­சி­யி­லுள்ள ஜனா­தி­பதி மொஹம்­மது புஹாரி 2 தவ­ணை­கள் பதவி வகித்­ததால் அவர் இத்­தேர்­தலில் போட்­டி­யி­ட­வில்லை. அவரின் அகில முற்போக்கு காங்­கிரஸ் (ஏபிசி) கட்­சியின் சார்­பில் லாகோஸ் மாநில முன்னாள் ஆளுநர் போலா அஹ்மத் டினுபு (70) போட்­டி­யிட்டார்.பிர­தான எதிர்க்­கட்­சி­யான மக்­களின் ஜன­நா­யகக் கட்சி சார்பில் முன்னாள் உப ஜனா­தி­பதி அதீகு அபூ­பக்கர் (76)  போட்­டி­யிட்டார். தொழிற்­கட்சி சார்பில் அனம்ப்ரா மாநில முன்னாள் ஆளுநர் பீட்டர் ஒபி (61)  போட்­டி­யிட்டார்.ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­கு­வ­தற்கு ஏனைய வேட்­பா­ளர்­களை அதி­கூ­டிய வாக்­கு­களைப் பெறு­வ­துடன், 36 மாநி­லங்­களில் குறைந்­த­பட்சம் மூன்றில் இரண்டு பங்கு மாநி­லங்­களில், அதா­வது 24 மாநி­லங்­களில், 25 சத­வீ­தத்­துக்கு அதி­க­மான வாக்­கு­க­ளையும் பெற வேண்டும். ஆபி­ரிக்­காவின் அதி­கூ­டிய சனத்­தொ­கையைக் கொண்ட நைஜீ­ரி­யாவில் 22.5 கோடி மக்கள் உள்­ளனர். இவர்­களில் 9.3 கோடி பேர் வாக்­க­ளிப்­ப­தற்குத்  தகுதி பெற்­றி­ருந்­தனர்.வாக்­கா­ளர்­களை அடை­யாளம் காண்­ப­தற்கு கைவிரல் மற்றும் முகம் அடை­யாள தொழில்­நுட்­பமும் முதல் தட­வை­யாக பயன்­ப­டுத்­தப்­பட்­டது.இத்தேர்தலில் ஆளும் அகில முற்போக்கு காங்கிரஸ் (ஏபிசி) வேட்பாளர் வெற்றியீட்டியுள்ளார் என அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement