• Apr 24 2024

திருகோணமலையில் பாலத்தைக் காணவில்லை - மக்கள் அவதி

harsha / Dec 20th 2022, 7:00 pm
image

Advertisement

இரண்டு தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக திருகோணமலை  மூதூர் - கட்டைபறிச்சான் இராழ் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீர் செல்வதால் இப்பாலத்தினூடாக பிரயாணம் செய்யும் பாடசாலை மாணவர்களும் ,பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதை அவதானிக்க முடிந்தது.

இப்பாலத்தினூடாக நீர் வடிந்தோடும் சந்தர்ப்பத்தில் இதற்கு முன்னர் இரண்டு உயிர்கள் காவு கொள்ளப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கட்டைபறிச்சான் இராழ் பாலத்தை கடந்து கணேசபுரம், அம்மன்நகர்,பள்ளிக்குடியிருப்பு,தோப்பூர் உள்ளிட்ட சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் , மூதூர் நகருக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பாலத்தை புனரமைத்துத்தருமாறு அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கட்டைபறிச்சான் இராழ் பாலத்தில் பயணிக்கும்போது ஏதாவது உயிராபத்துக்கள் இடம்பெற்றால் அதிகாரிகள்தான் பொறுப்பு என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

திருகோணமலையில் பாலத்தைக் காணவில்லை - மக்கள் அவதி இரண்டு தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக திருகோணமலை  மூதூர் - கட்டைபறிச்சான் இராழ் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீர் செல்வதால் இப்பாலத்தினூடாக பிரயாணம் செய்யும் பாடசாலை மாணவர்களும் ,பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதை அவதானிக்க முடிந்தது.இப்பாலத்தினூடாக நீர் வடிந்தோடும் சந்தர்ப்பத்தில் இதற்கு முன்னர் இரண்டு உயிர்கள் காவு கொள்ளப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கட்டைபறிச்சான் இராழ் பாலத்தை கடந்து கணேசபுரம், அம்மன்நகர்,பள்ளிக்குடியிருப்பு,தோப்பூர் உள்ளிட்ட சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் , மூதூர் நகருக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.இப்பாலத்தை புனரமைத்துத்தருமாறு அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.கட்டைபறிச்சான் இராழ் பாலத்தில் பயணிக்கும்போது ஏதாவது உயிராபத்துக்கள் இடம்பெற்றால் அதிகாரிகள்தான் பொறுப்பு என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement