• Apr 24 2024

புத்தாண்டிற்கு முன் இந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தால் செல்வம் பெருகுமாம்..!

Chithra / Dec 4th 2022, 10:24 am
image

Advertisement

2023 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது. நாம் ஒவ்வொருவருமே ஒரு புதிய ஆண்டு தொடங்கும் போது, அந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். 

மேலும் வரக்கூடிய புதிய ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் கொள்வோம். இது தவிர புதிய ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து அவற்றை செய்யவும் முயற்சிப்போம்.


அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு புதிய ஆண்டு தொடங்குவதற்கு முன் ஒரு சில பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தால், வாழ்க்கை செல்வ செழிப்போடு சிறப்பாக இருக்கும். 

இப்போது ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க எந்தெந்த பொருட்களை புத்தாண்டிற்கு முன் கொண்டு வர வேண்டும் என்பதைக் காண்போம்.

துளசி செடி


2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன் வீட்டிற்கு துளசி செடியை கொண்டு வந்து வைத்து வளர்த்து வாருங்கள். ஏனெனில் வீட்டில் துளசி செடியை நடுவதன் மூலம் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். 

அதே வேளையில் துளசி செடியில் லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்று கூறுவார்கள். எனவே துளசி செடியை வீட்டில் வைப்பதன் மூலம், லட்சுமி தேவியின் அருளால் வீட்டில் செல்வம் பெருகும். ஆனால் வீட்டில் துளசி செடியை வைத்தால், தினமும் தவறாமல் வழிபட வேண்டும்.

சிறிய தேங்காய்


புத்தாண்டு தொடங்குவதற்கு முன் வரும் புதன்கிழமை அன்று ஒரு சிறிய தேங்காயை வாங்கி, சிவப்பு துணியில் வைத்து சுற்றி, வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் வீட்டில் மகிழ்ச்சியும் எப்போதும் நிரம்பியிருக்கும்.

உலோக ஆமை அல்லது யானை


புத்தாண்டு தொடங்குவதற்கு முன் உலோக ஆமை அல்லது யானையை வீட்டிற்கு கொண்டு வருவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் ஆமையும், யானையும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் சின்னங்களாக கருதப்படுகின்றன. எனவே வருகிற 2023 ஆம் ஆண்டு வருவதற்கு முன் செம்பு, வெண்கலம் அல்லது வெள்ளியால் ஆன யானை அல்லது ஆமையை வாங்கி வந்து, வீட்டின் ஹாலில் வடக்கு திசையில் வையுங்கள். இப்படி செய்வதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும்.

முத்து சங்கு


வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் முத்து சங்கு வைத்திருப்பது நல்லதாக கூறப்படுகிறது. எனவே 2023 புத்தாண்டு வருவதற்கு முன் உங்கள் வீட்டில் முத்து சங்கு வையுங்கள். ஏனெனில் முத்து சங்கு லட்சுமி தேவிக்கு பிரியமானது. இதை பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். இதனால் வீட்டில் பணம் அதிகம் சேர்வதோடு, வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கும்.

சிரிக்கும் புத்தர்


2023 புத்தாண்டு உங்களுக்கு செழிப்பாக இருக்க வேண்டுமா? அப்படியானால் புத்தாண்டிற்கு முன் சிரிக்கும் புத்தரை வாங்கி வந்து வீட்டில் வையுங்கள். அதுவும் சிரிக்கும் புத்தரை வீட்டில் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் வாஸ்து தோஷங்கள் நீங்குவதோடு, வீட்டின் பொருளாதார நிலையும் மேம்படும்.

புத்தாண்டிற்கு முன் இந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தால் செல்வம் பெருகுமாம். 2023 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது. நாம் ஒவ்வொருவருமே ஒரு புதிய ஆண்டு தொடங்கும் போது, அந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். மேலும் வரக்கூடிய புதிய ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் கொள்வோம். இது தவிர புதிய ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து அவற்றை செய்யவும் முயற்சிப்போம்.அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு புதிய ஆண்டு தொடங்குவதற்கு முன் ஒரு சில பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தால், வாழ்க்கை செல்வ செழிப்போடு சிறப்பாக இருக்கும். இப்போது ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க எந்தெந்த பொருட்களை புத்தாண்டிற்கு முன் கொண்டு வர வேண்டும் என்பதைக் காண்போம்.துளசி செடி2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன் வீட்டிற்கு துளசி செடியை கொண்டு வந்து வைத்து வளர்த்து வாருங்கள். ஏனெனில் வீட்டில் துளசி செடியை நடுவதன் மூலம் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். அதே வேளையில் துளசி செடியில் லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்று கூறுவார்கள். எனவே துளசி செடியை வீட்டில் வைப்பதன் மூலம், லட்சுமி தேவியின் அருளால் வீட்டில் செல்வம் பெருகும். ஆனால் வீட்டில் துளசி செடியை வைத்தால், தினமும் தவறாமல் வழிபட வேண்டும்.சிறிய தேங்காய்புத்தாண்டு தொடங்குவதற்கு முன் வரும் புதன்கிழமை அன்று ஒரு சிறிய தேங்காயை வாங்கி, சிவப்பு துணியில் வைத்து சுற்றி, வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் வீட்டில் மகிழ்ச்சியும் எப்போதும் நிரம்பியிருக்கும்.உலோக ஆமை அல்லது யானைபுத்தாண்டு தொடங்குவதற்கு முன் உலோக ஆமை அல்லது யானையை வீட்டிற்கு கொண்டு வருவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் ஆமையும், யானையும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் சின்னங்களாக கருதப்படுகின்றன. எனவே வருகிற 2023 ஆம் ஆண்டு வருவதற்கு முன் செம்பு, வெண்கலம் அல்லது வெள்ளியால் ஆன யானை அல்லது ஆமையை வாங்கி வந்து, வீட்டின் ஹாலில் வடக்கு திசையில் வையுங்கள். இப்படி செய்வதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும்.முத்து சங்குவாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் முத்து சங்கு வைத்திருப்பது நல்லதாக கூறப்படுகிறது. எனவே 2023 புத்தாண்டு வருவதற்கு முன் உங்கள் வீட்டில் முத்து சங்கு வையுங்கள். ஏனெனில் முத்து சங்கு லட்சுமி தேவிக்கு பிரியமானது. இதை பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். இதனால் வீட்டில் பணம் அதிகம் சேர்வதோடு, வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கும்.சிரிக்கும் புத்தர்2023 புத்தாண்டு உங்களுக்கு செழிப்பாக இருக்க வேண்டுமா அப்படியானால் புத்தாண்டிற்கு முன் சிரிக்கும் புத்தரை வாங்கி வந்து வீட்டில் வையுங்கள். அதுவும் சிரிக்கும் புத்தரை வீட்டில் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் வாஸ்து தோஷங்கள் நீங்குவதோடு, வீட்டின் பொருளாதார நிலையும் மேம்படும்.

Advertisement

Advertisement

Advertisement