• Apr 24 2024

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட பிரித்தானிய பெண் - தலைமறைவு - மக்களிடம் உதவி கோரியுள்ள அதிகாரிகள்.!

Tamil nila / Feb 2nd 2023, 6:48 pm
image

Advertisement

காலி முகத்திடல் போராட்டத்தின் போது சமூக ஊடகங்களில் போராட்டம் தொடர்பான காணொளிகளை பகிர்ந்த பிரித்தானிய பிரஜையான Kayleigh Fraser  என்பவரை கண்டுபிடிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.


கடந்த வருடம் கடந்த ஓகஸ்ட் மாதம் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று விசா விதிமுறைகளை மீறியதாக கூறி கடவுச்சீட்டினை பறிமுதல் செய்திருந்தனர்.


அத்துடன் ஓகஸ்ட் 15ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட போதும் பிரித்தானிய பெண், அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள், பிரித்தானிய பெண்ணை கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளபோதும் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலேயே தங்கியிருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


மேலும், அவர் எந்த வகையிலும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும், குடிவரவு அதிகாரிகளிடம் இருந்து தப்பித்து வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட பிரித்தானிய பெண் - தலைமறைவு - மக்களிடம் உதவி கோரியுள்ள அதிகாரிகள். காலி முகத்திடல் போராட்டத்தின் போது சமூக ஊடகங்களில் போராட்டம் தொடர்பான காணொளிகளை பகிர்ந்த பிரித்தானிய பிரஜையான Kayleigh Fraser  என்பவரை கண்டுபிடிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.கடந்த வருடம் கடந்த ஓகஸ்ட் மாதம் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று விசா விதிமுறைகளை மீறியதாக கூறி கடவுச்சீட்டினை பறிமுதல் செய்திருந்தனர்.அத்துடன் ஓகஸ்ட் 15ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட போதும் பிரித்தானிய பெண், அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள், பிரித்தானிய பெண்ணை கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளபோதும் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலேயே தங்கியிருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.மேலும், அவர் எந்த வகையிலும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும், குடிவரவு அதிகாரிகளிடம் இருந்து தப்பித்து வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement