பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை ஏற்க தயாரில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை செவிமடுக்க தயாரில்லை என தெரிவித்துள்ள ரஞ்சித் மத்தும பண்டார, பிரதமரின் கட்டுப்பாட்டில் அரசாங்கம் இல்லை என தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச வாக்கெடுப்பின்றி பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதி சபாநாயகராக நியமிக்கவேண்டும் என நேற்று விருப்பம் வெளியிட்டிருந்தார்.
எனினும் இன்று காலை பிரதிசபாநாயகர் பதவியை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரே ஏற்கவேண்டும், வாக்கெடுப்பு அவசியமில்லை என பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இது நாடாளுமன்றத்திற்குள் உள்மோதல் காணப்படுவதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.