• Sep 29 2024

புநகரி, மாங்குளம், பரந்தன் சந்தி, உருத்திரபுரம் ஆகிய பகுதிகளில் - நிறுவப்பட்ட புத்தர் சிலைகள்! samugammedia

Tamil nila / Apr 19th 2023, 4:51 pm
image

Advertisement

சமகாலத்தில் இந்த மண்ணில் குறிப்பாக புநகரி, மாங்குளம், பரந்தன் சந்தி, உருத்திரபுரம் ஆகிய பகுதிகளில் ஆலமரங்கள் நாட்டப்பட்டு புத்த சிலைகள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அன்னை பூபதியின் நிணைவு வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

தமிழ் மக்கள் வாழுக்கின்ற பிரதேசங்களில் தற்போது அதிகளவான புத்த சிலைகள் வைக்கப்படுவதாக சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் வடக்கு கிழக்கில் மாத்திரமல்லாது கச்சதீவிலும் புத்த விகாரைகள் கட்டப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வலிகாமம் வடக்கில் உள்ள பல தேவாலையங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் பலாலி மற்றும் மயிலிட்டி போன்ற இடங்களில் உள்ள தேவாலையங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை திசைதிருப்பும் வகையிலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காவும் இவ்வாறு சில மதநிறுவனங்களை உருவாக்கி அரசியல் லாபங்கள் தேடப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


புநகரி, மாங்குளம், பரந்தன் சந்தி, உருத்திரபுரம் ஆகிய பகுதிகளில் - நிறுவப்பட்ட புத்தர் சிலைகள் samugammedia சமகாலத்தில் இந்த மண்ணில் குறிப்பாக புநகரி, மாங்குளம், பரந்தன் சந்தி, உருத்திரபுரம் ஆகிய பகுதிகளில் ஆலமரங்கள் நாட்டப்பட்டு புத்த சிலைகள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அன்னை பூபதியின் நிணைவு வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.தமிழ் மக்கள் வாழுக்கின்ற பிரதேசங்களில் தற்போது அதிகளவான புத்த சிலைகள் வைக்கப்படுவதாக சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.இந்த நடவடிக்கைகள் வடக்கு கிழக்கில் மாத்திரமல்லாது கச்சதீவிலும் புத்த விகாரைகள் கட்டப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.வலிகாமம் வடக்கில் உள்ள பல தேவாலையங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் பலாலி மற்றும் மயிலிட்டி போன்ற இடங்களில் உள்ள தேவாலையங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை திசைதிருப்பும் வகையிலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காவும் இவ்வாறு சில மதநிறுவனங்களை உருவாக்கி அரசியல் லாபங்கள் தேடப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement