• Sep 29 2024

நீதிமன்றம் தடையை மீறி பௌத்த கட்டுமானங்கள்...! இன வெறியோடு செயற்படும் பொலிஸார்...! கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Sep 14th 2023, 5:04 pm
image

Advertisement

நீதிமன்றம் தடை விதித்த போதும்  சட்டவிரோதமான பௌத்த கட்டுமானங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன எனவும் பொலிஸார் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிமன்றிற்கு இன்றையதினம் சமூகமளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2022 ஆம் ஆண்டிலே பௌத்த பிக்குமார் நீதிமன்ற கட்டளையை மீறி இங்கே இந்த பௌத்த விகாரையை கட்டுவதற்கான முயற்சியில் தொல்பொருள் திணைக்களத்தினரோடு இராணுவத்தை பயன்படுத்தினர். அந்த சந்தர்ப்பத்திலே பல சிவில் அமைப்புக்கள் சேர்ந்து ஒரு எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தோம்.

அந்த எதிர்ப்பு போராட்டத்தில் எங்களுடைய கோரிக்கையாக இருந்தது நீதிமன்றம் இந்த தொல்பொருள் இடத்திலே கட்டுமானங்களை தடை செய்திருக்கின்றது. இந்த நீதிமன்ற கட்டளையை மீறி கட்டுமானங்கள் செய்வது சட்டவிரோதமானது என்று.

அதிலே அவர்கள் புத்தர் சிலையை கொண்டுவந்து வைத்து கட்டுமானங்களை மேற்கொள்ளுவதற்கு முயன்றிருக்கிறார்கள். அந்த சந்தர்ப்பத்திலே நாங்கள்  நீதிமன்ற கட்டளையை உரிய முறையில் மதித்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் எங்களுடைய போராட்டத்தை நடத்தியிருந்த ஒரு சூழலிலே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கின்ற குருந்தூர்மலை விகாராதிபதி என்று சட்டவிரோத விகாராதிபதி கல்கமுவ சந்தபோதி தேரர் அவரும் அவரோடு சேர்ந்த இன்னொரு கும்பலும் பொலிஸ்  நிலையத்தில் எங்களுக்கு எதிராக ஒரு பொய்யான ஒரு முறைப்பாட்டை செய்திருந்தார்கள்.

நாங்கள் தங்களுடைய வழிபாட்டை தடுத்ததாகவும் ஒரு அப்பட்டமான பொய் அது. ஒரு தொல்பொருளிடம் அதுமட்டுமல்லாமல் நீதிமன்றம் அந்த இடத்திலே கட்டுமானங்கள் செய்யக்கூடாது என்று தடுத்திருந்த இடத்திலே அவர்கள் ஒரு கட்டுமான நடவடிக்கையில் இராணுவத்தோடு சேர்ந்து தொல்பொருள் திணைக்களத்தோடும் சேர்ந்தும்  ஈடுபட்ட பொது நீதி மன்ற கட்டளையை மதித்து நடக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருந்தது.

அனால், பொலிஸாரே  அந்த இனவாதமாக அந்த பௌத்த பிக்குகளினுடைய பொய்யான முறைப்பாடுகளின் அடிப்படையிலே எங்களுக்கு எதிரான ஒரு பொய்யான வழக்கை  பதிவு செய்து எங்களுக்கு எதிராக ஒரு வழக்கை  தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அந்த அடிப்படையிலே ஏற்கனவே ரவிகரன் அவர்களும் சிவநேசன் அவர்களும் யூட்சன் அவர்களும் இந்த வழக்குகளுக்கான கட்டளை கிடைக்க பெற்றவர்களை சமூகமளித்திருந்த போதிலும் எனக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வினோ அவர்களுக்கும் அந்த கட்டளை வழங்கப்பட்டிருக்கவில்லை.

அதன் காரணமாக அதனால் மூன்று தடவை நாங்கள் இங்கே சமூகமளிக்கவில்லை. இருந்தாலும் நாங்கள் கட்டாயம் சமூகமளிக்க வேண்டும் என்று நீதிபதி நீதிமன்றத்திலே தெரிவித்திருந்ததாலே எங்களுடைய சக உறுப்பினர்கள் ஒருமித்த அடிப்படையிலே இன்று இந்த இடத்திற்கு வந்திருந்தோம்.

இந்த இடத்திலே நானும் பாராளுமன்ற உறுப்பினர் வினோ அண்ணனும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றோம்.

அடுத்த தவணை  தை மாதம் 16 ஆம் திகதி என திகதியிடப்பட்டுள்ளது. இதிலே வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் கடந்த 8 ஆம் மாதம் குறுந்தூர்மலையில் இருக்கின்ற ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் சைவ சமயத்தவர்கள் பாரம்பரியமாக காலாதிகாலமாக வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்ற கால கட்டத்திலே அவர்கள் அந்த வழிபாட்டில் ஈடுபடலாம் என்றும், இந்த வழிபாடுகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று  நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருக்கிறது.

2018 ஆம் ஆண்டிலிருந்து அந்த கட்டளை இருக்கின்றது. கடந்த 8 ஆம்  மாதம் 17 ஆம்  திகதி இந்த நீதிமன்றத்துக்கு பொலிசார் வந்து பூஜை வழிபாட்டை தடுக்க வேண்டும் என்று கேட்ட பொழுதும்  கூட ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் அந்த வழிபாடுகளுக்கு ஏற்படுத்தக்கூடாது என்று தான் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தது.

அதேநேரத்தில் கல்கமுவ சாந்தபோதி தேரரினுடைய பெயரும் குறிப்பிடப்பட்டு அவர் இடையூறு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்ட நிலையிலும் க்கோட 18 ஆம் திகதி  அந்த கட்டளையை மீறி நாங்கள் அந்த பொங்கல் வழிபாட்டில்  ஈடுபட்ட போது அந்த  இடத்திலே வந்து  மிகப்பெரிய ஒரு குழப்பத்தில் ஈடுபட்டிருந்தார்.

இனங்களுக்கிடையில் ஒரு மோதலை ஏற்படுத்துகின்ற ஒரு செயல்பாட்டில் அவர் ஈடுபட்டிருந்தார். அதற்கெதிராக நாங்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நாங்கள் முறைப்பாடு செய்திருந்தோம். ஆனால் இன்றுவரை அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அவர்களுக்காக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் தமிழர்கள் என்ற காரணத்துக்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இருக்கின்ற பெரும்பான்மை இன  சிங்களத்தை சேர்ந்த பொலிசார் இன  வெறியோடு மதவாதத்தோடு எங்களுக்கு எதிராக வேண்டுமென்றே பக்கச் சார்பாக ஒரு பொய் வழக்கை போட்டு எங்களை அலைக்கழிக்கிறார்கள். ஆனால் உண்மையிலே  நீதிமன்ற கட்டளையை மீறி குழப்பத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்த வழக்கும் இது வரைக்கும் தாக்கல் செய்யப்படவில்லை - என அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தடையை மீறி பௌத்த கட்டுமானங்கள். இன வெறியோடு செயற்படும் பொலிஸார். கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு.samugammedia நீதிமன்றம் தடை விதித்த போதும்  சட்டவிரோதமான பௌத்த கட்டுமானங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன எனவும் பொலிஸார் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.முல்லைத்தீவு நீதிமன்றிற்கு இன்றையதினம் சமூகமளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த 2022 ஆம் ஆண்டிலே பௌத்த பிக்குமார் நீதிமன்ற கட்டளையை மீறி இங்கே இந்த பௌத்த விகாரையை கட்டுவதற்கான முயற்சியில் தொல்பொருள் திணைக்களத்தினரோடு இராணுவத்தை பயன்படுத்தினர். அந்த சந்தர்ப்பத்திலே பல சிவில் அமைப்புக்கள் சேர்ந்து ஒரு எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தோம். அந்த எதிர்ப்பு போராட்டத்தில் எங்களுடைய கோரிக்கையாக இருந்தது நீதிமன்றம் இந்த தொல்பொருள் இடத்திலே கட்டுமானங்களை தடை செய்திருக்கின்றது. இந்த நீதிமன்ற கட்டளையை மீறி கட்டுமானங்கள் செய்வது சட்டவிரோதமானது என்று.அதிலே அவர்கள் புத்தர் சிலையை கொண்டுவந்து வைத்து கட்டுமானங்களை மேற்கொள்ளுவதற்கு முயன்றிருக்கிறார்கள். அந்த சந்தர்ப்பத்திலே நாங்கள்  நீதிமன்ற கட்டளையை உரிய முறையில் மதித்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் எங்களுடைய போராட்டத்தை நடத்தியிருந்த ஒரு சூழலிலே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கின்ற குருந்தூர்மலை விகாராதிபதி என்று சட்டவிரோத விகாராதிபதி கல்கமுவ சந்தபோதி தேரர் அவரும் அவரோடு சேர்ந்த இன்னொரு கும்பலும் பொலிஸ்  நிலையத்தில் எங்களுக்கு எதிராக ஒரு பொய்யான ஒரு முறைப்பாட்டை செய்திருந்தார்கள். நாங்கள் தங்களுடைய வழிபாட்டை தடுத்ததாகவும் ஒரு அப்பட்டமான பொய் அது. ஒரு தொல்பொருளிடம் அதுமட்டுமல்லாமல் நீதிமன்றம் அந்த இடத்திலே கட்டுமானங்கள் செய்யக்கூடாது என்று தடுத்திருந்த இடத்திலே அவர்கள் ஒரு கட்டுமான நடவடிக்கையில் இராணுவத்தோடு சேர்ந்து தொல்பொருள் திணைக்களத்தோடும் சேர்ந்தும்  ஈடுபட்ட பொது நீதி மன்ற கட்டளையை மதித்து நடக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருந்தது.அனால், பொலிஸாரே  அந்த இனவாதமாக அந்த பௌத்த பிக்குகளினுடைய பொய்யான முறைப்பாடுகளின் அடிப்படையிலே எங்களுக்கு எதிரான ஒரு பொய்யான வழக்கை  பதிவு செய்து எங்களுக்கு எதிராக ஒரு வழக்கை  தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த அடிப்படையிலே ஏற்கனவே ரவிகரன் அவர்களும் சிவநேசன் அவர்களும் யூட்சன் அவர்களும் இந்த வழக்குகளுக்கான கட்டளை கிடைக்க பெற்றவர்களை சமூகமளித்திருந்த போதிலும் எனக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வினோ அவர்களுக்கும் அந்த கட்டளை வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன் காரணமாக அதனால் மூன்று தடவை நாங்கள் இங்கே சமூகமளிக்கவில்லை. இருந்தாலும் நாங்கள் கட்டாயம் சமூகமளிக்க வேண்டும் என்று நீதிபதி நீதிமன்றத்திலே தெரிவித்திருந்ததாலே எங்களுடைய சக உறுப்பினர்கள் ஒருமித்த அடிப்படையிலே இன்று இந்த இடத்திற்கு வந்திருந்தோம். இந்த இடத்திலே நானும் பாராளுமன்ற உறுப்பினர் வினோ அண்ணனும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றோம். அடுத்த தவணை  தை மாதம் 16 ஆம் திகதி என திகதியிடப்பட்டுள்ளது. இதிலே வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் கடந்த 8 ஆம் மாதம் குறுந்தூர்மலையில் இருக்கின்ற ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் சைவ சமயத்தவர்கள் பாரம்பரியமாக காலாதிகாலமாக வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்ற கால கட்டத்திலே அவர்கள் அந்த வழிபாட்டில் ஈடுபடலாம் என்றும், இந்த வழிபாடுகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று  நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டிலிருந்து அந்த கட்டளை இருக்கின்றது. கடந்த 8 ஆம்  மாதம் 17 ஆம்  திகதி இந்த நீதிமன்றத்துக்கு பொலிசார் வந்து பூஜை வழிபாட்டை தடுக்க வேண்டும் என்று கேட்ட பொழுதும்  கூட ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் அந்த வழிபாடுகளுக்கு ஏற்படுத்தக்கூடாது என்று தான் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தது. அதேநேரத்தில் கல்கமுவ சாந்தபோதி தேரரினுடைய பெயரும் குறிப்பிடப்பட்டு அவர் இடையூறு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்ட நிலையிலும் க்கோட 18 ஆம் திகதி  அந்த கட்டளையை மீறி நாங்கள் அந்த பொங்கல் வழிபாட்டில்  ஈடுபட்ட போது அந்த  இடத்திலே வந்து  மிகப்பெரிய ஒரு குழப்பத்தில் ஈடுபட்டிருந்தார். இனங்களுக்கிடையில் ஒரு மோதலை ஏற்படுத்துகின்ற ஒரு செயல்பாட்டில் அவர் ஈடுபட்டிருந்தார். அதற்கெதிராக நாங்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நாங்கள் முறைப்பாடு செய்திருந்தோம். ஆனால் இன்றுவரை அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அவர்களுக்காக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் தமிழர்கள் என்ற காரணத்துக்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இருக்கின்ற பெரும்பான்மை இன  சிங்களத்தை சேர்ந்த பொலிசார் இன  வெறியோடு மதவாதத்தோடு எங்களுக்கு எதிராக வேண்டுமென்றே பக்கச் சார்பாக ஒரு பொய் வழக்கை போட்டு எங்களை அலைக்கழிக்கிறார்கள். ஆனால் உண்மையிலே  நீதிமன்ற கட்டளையை மீறி குழப்பத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்த வழக்கும் இது வரைக்கும் தாக்கல் செய்யப்படவில்லை - என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement