• Mar 29 2024

சிங்கப்பூரில் நீல நிறத்தில் மாறிய கட்டடங்கள்! SamugamMedia

Tamil nila / Mar 21st 2023, 8:50 am
image

Advertisement

சிங்கப்பூரில் 56 அடையாளச் சின்னங்களும் கட்டடங்களும் நீலநிறத்தில் பிரகாசிக்கப்பட்டுள்ளது.


உலகத் தண்ணீர் தினத்தை (22 மார்ச்) அனுசரிக்கவே அத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


PUB எனும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் City Turns Blue திட்டத்தின்கீழ் கட்டடங்களுக்கு நீல நிறத்தில் ஒளியூட்டப்படுகிறது.


சிங்கப்பூரில் இம்முறை சாதனையளவில் 56 கட்டடங்களுக்கு நீல ஒளி சேர்க்கப்படுகிறது. Capitol Singapore, Fullerton Hotel, மரினா பே நிதி நிலையம், செந்தோசாவின் SkyHelix உள்ளிட்ட 16 புதிய கட்டடங்களிலும் ஒளியூட்டைக் காணலாம்.


குறிப்பாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கல்விநிலையம், ITE கல்லூரி, நன்யாங் நுண்கலைக்கழகம், துமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகிய மேல்நிலைக் கல்வி நிலையங்கள் திட்டத்தில் முதல்முறை பங்கெடுக்கின்றன.


இம்மாதம் முழுவதிலும் #GoBlue4SG எனும் இயக்கம் தொடர்பாக, அதன் தண்ணீர்ச் சேமிப்பு முயற்சிகளில் உள்ளூர்ச் சமூகத்தின் ஆதரவைப் பெறப் பொதுப் பயனீட்டுக் கழகம் முனைகிறது.


உலகத் தண்ணீர் தினத்தையொட்டி சிங்கப்பூரில் தண்ணீர்ச் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிகளில் மொத்தம் 460 பங்காளிகள், பங்காளி அமைப்புகளின் பங்கெடுப்பு இடம்பெறுகிறது.


சிங்கப்பூரில் நீல நிறத்தில் மாறிய கட்டடங்கள் SamugamMedia சிங்கப்பூரில் 56 அடையாளச் சின்னங்களும் கட்டடங்களும் நீலநிறத்தில் பிரகாசிக்கப்பட்டுள்ளது.உலகத் தண்ணீர் தினத்தை (22 மார்ச்) அனுசரிக்கவே அத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.PUB எனும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் City Turns Blue திட்டத்தின்கீழ் கட்டடங்களுக்கு நீல நிறத்தில் ஒளியூட்டப்படுகிறது.சிங்கப்பூரில் இம்முறை சாதனையளவில் 56 கட்டடங்களுக்கு நீல ஒளி சேர்க்கப்படுகிறது. Capitol Singapore, Fullerton Hotel, மரினா பே நிதி நிலையம், செந்தோசாவின் SkyHelix உள்ளிட்ட 16 புதிய கட்டடங்களிலும் ஒளியூட்டைக் காணலாம்.குறிப்பாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கல்விநிலையம், ITE கல்லூரி, நன்யாங் நுண்கலைக்கழகம், துமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகிய மேல்நிலைக் கல்வி நிலையங்கள் திட்டத்தில் முதல்முறை பங்கெடுக்கின்றன.இம்மாதம் முழுவதிலும் #GoBlue4SG எனும் இயக்கம் தொடர்பாக, அதன் தண்ணீர்ச் சேமிப்பு முயற்சிகளில் உள்ளூர்ச் சமூகத்தின் ஆதரவைப் பெறப் பொதுப் பயனீட்டுக் கழகம் முனைகிறது.உலகத் தண்ணீர் தினத்தையொட்டி சிங்கப்பூரில் தண்ணீர்ச் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிகளில் மொத்தம் 460 பங்காளிகள், பங்காளி அமைப்புகளின் பங்கெடுப்பு இடம்பெறுகிறது.

Advertisement

Advertisement

Advertisement