• Apr 25 2024

மீண்டும் அணிக்கு திரும்புகிறார் பும்ரா!!

Tamil nila / Jan 3rd 2023, 10:36 pm
image

Advertisement

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த அந்நாட்டு அணிக்கு எதிரான T20 போட்டியின்போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. முதுகில் அடைந்த காயத்தால் அவதிப்பட்ட அவர், அடுத்து நடந்த உலகக்கோப்பை T20 கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.


இதைத் தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் தொடரிலும் பும்ரா இடம்பெறவில்லை. இந்நிலையில் சுமார் 4 மாதங்களுக்கு பின்னர் இந்திய அணியில் பும்ரா மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. பவுலிங் வரிசையில் இந்திய அணியில் தடுமாற்றம் காணப்பட்டு வந்த நிலையில், பும்ராவின் வருகையால் பவுலிங் யூனிட் பலம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக 20 பேர் கொண்ட அணியை BCCI முடிவு செய்திருக்கிறது. பும்ராவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், பும்ராவின் இலங்கைக்கு எதிரான பந்து வீச்சு கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


காயங்கள் ஏதுமின்றி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதை முக்கிய ஆட்டக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று BCCI வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில் காயத்தால் ஓய்வில் இருக்கும் வீரர்கள் சிலர், IPL கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு BCCI வலியுறுத்தும் என்று கூறப்படுகிறது.


இந்த சூழலில் 3 மாத ஓய்வுக்கு பின்னர் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஆட்டக்காரராகவும் பும்ரா இருக்கிறார்.

மீண்டும் அணிக்கு திரும்புகிறார் பும்ரா இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த அந்நாட்டு அணிக்கு எதிரான T20 போட்டியின்போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. முதுகில் அடைந்த காயத்தால் அவதிப்பட்ட அவர், அடுத்து நடந்த உலகக்கோப்பை T20 கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் தொடரிலும் பும்ரா இடம்பெறவில்லை. இந்நிலையில் சுமார் 4 மாதங்களுக்கு பின்னர் இந்திய அணியில் பும்ரா மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. பவுலிங் வரிசையில் இந்திய அணியில் தடுமாற்றம் காணப்பட்டு வந்த நிலையில், பும்ராவின் வருகையால் பவுலிங் யூனிட் பலம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக 20 பேர் கொண்ட அணியை BCCI முடிவு செய்திருக்கிறது. பும்ராவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், பும்ராவின் இலங்கைக்கு எதிரான பந்து வீச்சு கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.காயங்கள் ஏதுமின்றி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதை முக்கிய ஆட்டக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று BCCI வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில் காயத்தால் ஓய்வில் இருக்கும் வீரர்கள் சிலர், IPL கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு BCCI வலியுறுத்தும் என்று கூறப்படுகிறது.இந்த சூழலில் 3 மாத ஓய்வுக்கு பின்னர் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஆட்டக்காரராகவும் பும்ரா இருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement