• Mar 29 2024

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பியவேளை வர்த்தகரின் மகன் கடத்தல் - கண்டியில் சம்பவம்! SamugamMedia

Tamil nila / Mar 22nd 2023, 9:17 am
image

Advertisement

கண்டியில் வர்த்தகப் பிரச்சினை ஒன்றின் காரணமாக வர்த்தகரின் பதினேழு வயதுடைய பாடசாலை செல்லும் மகனைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கான காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


ஹந்தானை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டதாக கூறப்படும் குறித்த துணி வியாபாரி, துணி விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து பெற்ற துணிக்காக 12 இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டியிருந்ததாகவும்,அவர் அதை செலுத்த தவறிய நிலையில். கடனாளி அதனை தொடர்ந்து கேட்டதாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


பேராதனை வீதியில் உள்ள தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​மூன்று நபர்களுடன் வாகனத்தில் வந்து மாணவனை கடத்திச் சென்று கடுகன்னாவ பகுதியில் வைத்து கண்டி துணி வியாபாரிக்கு அழைப்பை எடுத்து கடனை அடைக்கும் வரை. மகனை விடுவிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.


அதனையடுத்து மாணவனின் தாயார் கண்டி தலைமையக காவல் நிலையம் வந்து குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்ததையடுத்து காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கண்டி தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதான காவல்துறை பரிசோதகர் ரசிக சம்பத், குழந்தையை கடத்தியதாக கூறப்படும் நபரின் கைத்தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு, குழந்தையுடன் சரணடையுமாறு அறிவித்தார். கடுகன்னாவ பிரதேசத்தில் பேருந்தில் வைத்து மாணவனை காவல்துறையிடம் அனுப்பிவிட்டு அவர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


மாணவனுக்கு விபத்து ஏதும் ஏற்படவில்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பொல்கஹவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனக் கூறப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கண்டி தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதான காவல்துறை பரிசோதகர் ரசிக சம்பத் பணிப்புரையின் பிரகாரம் குற்றத்தடுப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் நளின் உள்ளிட்ட காவல்துறை குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பியவேளை வர்த்தகரின் மகன் கடத்தல் - கண்டியில் சம்பவம் SamugamMedia கண்டியில் வர்த்தகப் பிரச்சினை ஒன்றின் காரணமாக வர்த்தகரின் பதினேழு வயதுடைய பாடசாலை செல்லும் மகனைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கான காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.ஹந்தானை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டதாக கூறப்படும் குறித்த துணி வியாபாரி, துணி விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து பெற்ற துணிக்காக 12 இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டியிருந்ததாகவும்,அவர் அதை செலுத்த தவறிய நிலையில். கடனாளி அதனை தொடர்ந்து கேட்டதாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.பேராதனை வீதியில் உள்ள தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​மூன்று நபர்களுடன் வாகனத்தில் வந்து மாணவனை கடத்திச் சென்று கடுகன்னாவ பகுதியில் வைத்து கண்டி துணி வியாபாரிக்கு அழைப்பை எடுத்து கடனை அடைக்கும் வரை. மகனை விடுவிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.அதனையடுத்து மாணவனின் தாயார் கண்டி தலைமையக காவல் நிலையம் வந்து குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்ததையடுத்து காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கண்டி தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதான காவல்துறை பரிசோதகர் ரசிக சம்பத், குழந்தையை கடத்தியதாக கூறப்படும் நபரின் கைத்தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு, குழந்தையுடன் சரணடையுமாறு அறிவித்தார். கடுகன்னாவ பிரதேசத்தில் பேருந்தில் வைத்து மாணவனை காவல்துறையிடம் அனுப்பிவிட்டு அவர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.மாணவனுக்கு விபத்து ஏதும் ஏற்படவில்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பொல்கஹவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனக் கூறப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கண்டி தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதான காவல்துறை பரிசோதகர் ரசிக சம்பத் பணிப்புரையின் பிரகாரம் குற்றத்தடுப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் நளின் உள்ளிட்ட காவல்துறை குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement