• Apr 19 2024

உங்கள் குதிகால்களில் உள்ள வெடிப்பை சரி செய்யனுமா? இதோ சில சூப்பரான டிப்ஸ்!

Tamil nila / Jan 29th 2023, 6:13 pm
image

Advertisement

பெரும்பாலான மக்கள் குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர்.அதுமட்டுமில்லாமல் குதிகால் வெடிப்பால் சிலருக்குக் காலில் ரத்தக் கசிவு கூட ஏற்படும்.


குதிகால் வெடிப்புக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன.ஆனால் இது நிரந்தரமாக போகாது. இருப்பினும் இதனை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்:


மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். 


 கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்.


வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்து , இந்த கலவையில் விளக்கெண்ணெய்யுடன், பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால் பித்த வெடிப்பு நீங்கும்.   


எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர கால் வெடிப்பு மறைந்து பாதம் பளபளப்பாகும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து பின் கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்குவதோடு வெடிப்பையும் மறைய செய்யும்.


நன்கு பழுத்த பப்பாளி பழத்தை அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு மறையும்.


வாழைப்பழத்தை மசித்து, அதில் 2 தேக்கரண்டி ஒலிவ் எண்ணெய் சேர்த்துக் கலந்து, குதிகால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இப்படித் தினமும் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.  


உங்கள் குதிகால்களில் உள்ள வெடிப்பை சரி செய்யனுமா இதோ சில சூப்பரான டிப்ஸ் பெரும்பாலான மக்கள் குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர்.அதுமட்டுமில்லாமல் குதிகால் வெடிப்பால் சிலருக்குக் காலில் ரத்தக் கசிவு கூட ஏற்படும்.குதிகால் வெடிப்புக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன.ஆனால் இது நிரந்தரமாக போகாது. இருப்பினும் இதனை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்:மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.  கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்.வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்து , இந்த கலவையில் விளக்கெண்ணெய்யுடன், பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால் பித்த வெடிப்பு நீங்கும்.   எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர கால் வெடிப்பு மறைந்து பாதம் பளபளப்பாகும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து பின் கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்குவதோடு வெடிப்பையும் மறைய செய்யும்.நன்கு பழுத்த பப்பாளி பழத்தை அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு மறையும்.வாழைப்பழத்தை மசித்து, அதில் 2 தேக்கரண்டி ஒலிவ் எண்ணெய் சேர்த்துக் கலந்து, குதிகால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இப்படித் தினமும் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.  

Advertisement

Advertisement

Advertisement