ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை!மிக அவதானமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்களே!

129

மேஷ ராசிக்காரர்களே!

இன்றைய நாள் இனிய நாளாக அமைய போகின்றது. எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து பணவரவு சீராக இருக்கும். உத்யோகத்தில் புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு இருக்கும்.தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்படும். உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

ரிஷப ராசிக்காரர்களே!

இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. கணவன் மனைவி உறவில் எதிர்பார்க்காத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழிலில் ஓரளவுக்கு லாபம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது.

மிதுன ராசிக்காரர்களே!

இன்றைய நாள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு . வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அரசு வழி காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

கடக ராசிக்காரர்களே!

இன்றைய நாள் சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் காலதாமதமான பலன்கள் உண்டு. நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும்.

சிம்ம ராசிக்காரர்களே!

இன்றைய நாள் சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வாடிக்கையாளர்களை கவர புதிய விஷயங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன பயணங்களில் எச்சரிக்கை தேவை.

கன்னி ராசிக்காரர்களே!

இன்றைய நாள் கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரத்தை சீர் செய்து கொள்ள முடியும்.

துலாம் ராசிக்காரர்களே!

இன்றைய நாள் நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும் எனினும் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கைக்கு வந்து சேரும்.

விருச்சிக ராசிக்காரர்களே!

இன்றைய நாள் எதிலும் முன்னேற்றம் குறைவாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மைகள் பெறலாம். பெண்கள் இறை வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு ராசிக்காரர்களே!

இன்றைய நாள் நினைத்தது நிறைவேற கூடிய நாளாக அமையும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள். குடும்பத்தில் தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். உத்தியோக ரீதியான இடமாற்றம் சாதக பலன்களை கொடுக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகர ராசிக்காரர்களே!

இன்றைய நாள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உண்டு.

கும்ப ராசிக்காரர்களே!

இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். சாதுரியமான நடவடிக்கைகள் முன்னேற்றத்தை தரும்.

மீன ராசிக்காரர்களே!

இன்றைய நாள் மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை மேலோங்கி காணப்படும். பிள்ளைகள் வழியே நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: