• Mar 29 2024

சீதையை இராவணன் மறைத்து வைத்த குகை:வைரலாகும் புகைப்படங்கள்!

Sharmi / Dec 11th 2022, 7:14 pm
image

Advertisement

இராமாயணத்திலே இராவணன் சீதையைக் கடத்தி வந்து இலங்கா பூரியில் பல குகைகளில் மறைத்து வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

அவ்வாறு சீதையை இராணவன் மறைத்து வைத்த ஒரு குகைதான் இந்த இராவணன் குகை.இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பண்டாரவளையில் இருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில்தான் எல்லே நகரம் அமைந்திருக்கின்றது.

நகரத்தின் மத்தியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவான மலையில் தான் குறித்த  இராவணன் குகை அமைந்திருக்கின்றது. இராவணன் குகை 50 அடி அகலமும், 150 அடி நீளமும், 60 அடி உயரமும் கொண்டதாக கற்கலால் அமைக்கப்பட்டிருக்கின்றது.

கடல் மட்டத்திலிருந்து 4490 அடி உயரத்தில் அமையப் பெற்றுள்ளது. இராவணன் குகைக்கு யாரும் எந்த நேரமும் செல்ல முடியாது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி மணி வரை தான் செல்ல முடியும்.

இதோ இதுதான் குகைக்குள் செல்வதற்கான வாயில் கதவு இது காலையில் பூட்டியிருக்கும் 8 மணிக்குத்தான் இதனைத் திறந்து விடுவார்கள்.இந்தப் படிகளினூடாகத்தான் நாம் குகையை நோக்கி செல்ல முடியும் கிட்டத்தட்ட ஆயிரம் படிகளுக்கு மேல் இருக்கின்றன.

செங்குத்தாகவும் சமாந்திரமாகவும் வளைவுகள் நிறைந்ததாகவும் இந்த படிகள் அமைக்கப்பட்டுள்ளமை இந்த குகையின் சிறப்பு அம்சம் ஆகும்.






சீதையை இராவணன் மறைத்து வைத்த குகை:வைரலாகும் புகைப்படங்கள் இராமாயணத்திலே இராவணன் சீதையைக் கடத்தி வந்து இலங்கா பூரியில் பல குகைகளில் மறைத்து வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.அவ்வாறு சீதையை இராணவன் மறைத்து வைத்த ஒரு குகைதான் இந்த இராவணன் குகை.இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பண்டாரவளையில் இருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில்தான் எல்லே நகரம் அமைந்திருக்கின்றது.நகரத்தின் மத்தியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவான மலையில் தான் குறித்த  இராவணன் குகை அமைந்திருக்கின்றது. இராவணன் குகை 50 அடி அகலமும், 150 அடி நீளமும், 60 அடி உயரமும் கொண்டதாக கற்கலால் அமைக்கப்பட்டிருக்கின்றது.கடல் மட்டத்திலிருந்து 4490 அடி உயரத்தில் அமையப் பெற்றுள்ளது. இராவணன் குகைக்கு யாரும் எந்த நேரமும் செல்ல முடியாது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி மணி வரை தான் செல்ல முடியும்.இதோ இதுதான் குகைக்குள் செல்வதற்கான வாயில் கதவு இது காலையில் பூட்டியிருக்கும் 8 மணிக்குத்தான் இதனைத் திறந்து விடுவார்கள்.இந்தப் படிகளினூடாகத்தான் நாம் குகையை நோக்கி செல்ல முடியும் கிட்டத்தட்ட ஆயிரம் படிகளுக்கு மேல் இருக்கின்றன.செங்குத்தாகவும் சமாந்திரமாகவும் வளைவுகள் நிறைந்ததாகவும் இந்த படிகள் அமைக்கப்பட்டுள்ளமை இந்த குகையின் சிறப்பு அம்சம் ஆகும்.

Advertisement

Advertisement

Advertisement