• Sep 28 2024

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா! samugammedia

Tamil nila / Jun 21st 2023, 3:55 pm
image

Advertisement

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இன்றையதினம் (21.06) இடம்பெற்றது.



இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலையின் பிரதான நூழைவாயிலினை திறந்து வைத்ததுடன், கௌரவ விருந்தினர்களான வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் லெனின் அறிவழகன், மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் த.இராசரத்தினம் ஆகியோரால் திருவள்ளுவர், பண்டாரவன்னியன் மற்றும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த கலாநிதி அப்துல்கலாம் ஆகியோரின் சிலைகளும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.


இதன்போது சாதாரண தரம், உயர்தரம் மற்றும் விளையாட்டுக்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களிற்கான கௌரவிப்புகளும் இடம்பெற்றிருந்தது.


பாடசாலை அதிபர் கோ.குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடாசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா samugammedia வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இன்றையதினம் (21.06) இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலையின் பிரதான நூழைவாயிலினை திறந்து வைத்ததுடன், கௌரவ விருந்தினர்களான வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் லெனின் அறிவழகன், மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் த.இராசரத்தினம் ஆகியோரால் திருவள்ளுவர், பண்டாரவன்னியன் மற்றும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த கலாநிதி அப்துல்கலாம் ஆகியோரின் சிலைகளும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.இதன்போது சாதாரண தரம், உயர்தரம் மற்றும் விளையாட்டுக்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களிற்கான கௌரவிப்புகளும் இடம்பெற்றிருந்தது.பாடசாலை அதிபர் கோ.குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடாசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement