• Mar 29 2024

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்! samugammedia

Chithra / May 26th 2023, 11:46 am
image

Advertisement

இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் திட்டமிட்ட வகையில் தளர்த்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் கட்டுப்பாடின்றி உயர்வதைத் தடுக்க நாம் பல தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. 70 சதவீதமாக இருந்த பணவீக்கம் இப்போது 30 சதவீதத்தை எட்டியுள்ளது.


நான்காவது காலாண்டில் பணவீக்கம் ஒற்றை இலக்கத்தை எட்டும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு படிப்படியாக அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, எதிர்காலத்தில் நிலைமை மேம்படுவதன் மூலம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படும். மூலதனப் பரிவர்த்தனைகளுக்கான கட்டுப்பாடுகளை முறையாக தளர்த்துவோம் என நம்புகிறோம், இவை வணிக நடவடிக்கைகளை அதிகரிக்க உதவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல் samugammedia இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் திட்டமிட்ட வகையில் தளர்த்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.தற்போதுள்ள நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.பணவீக்கம் கட்டுப்பாடின்றி உயர்வதைத் தடுக்க நாம் பல தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. 70 சதவீதமாக இருந்த பணவீக்கம் இப்போது 30 சதவீதத்தை எட்டியுள்ளது.நான்காவது காலாண்டில் பணவீக்கம் ஒற்றை இலக்கத்தை எட்டும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு படிப்படியாக அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக, எதிர்காலத்தில் நிலைமை மேம்படுவதன் மூலம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படும். மூலதனப் பரிவர்த்தனைகளுக்கான கட்டுப்பாடுகளை முறையாக தளர்த்துவோம் என நம்புகிறோம், இவை வணிக நடவடிக்கைகளை அதிகரிக்க உதவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement