கிராம உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்ட சவால்

245

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொவிட் தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கிராம உத்தியோகத்தர்களால் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடந்த கொவிட் கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கொவிட் தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் 4 பிரிவுகளின் கீழ் அறிக்கையிடப்பட வேண்டும்.

வயது அடிப்படையில் தகவல்கள் பெறப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு கிராம உத்தியோகத்தரும் இந்த தகவல்களை அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன் அறிக்கையிட வேண்டும்.

இருப்பினும், இந்த திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது என கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: