• Mar 29 2024

அமேசான் காட்டில் தொலைந்த குழந்தைகள் 40 நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு! samugammedia

Tamil nila / Jun 10th 2023, 7:27 pm
image

Advertisement

கொலம்பியாவின் அமேசான் காடுகளில் விமானம் விபத்துக்குள்ளானதில் 40 நாட்களுக்குப் பிறகு 4 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த 4 சிறுவர்களும்  மே 1 ஆம் திகதி, 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் ஒரு சிறிய ரக விமானம் கொலம்பியாவில் இருந்து புறப்பட்டு அமேசான் காட்டில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

விமானத்தில் பயணித்த சிறுவர்களின் தாய், விமானி உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில், லெஸ்லி ஜேகோபோம்பேர் (13), சோலோனி ஜெகோபோம்பேர் (9), டியன் ரனோக் முகுடி (4)மற்றும் கைக்குழந்தையான கிறிஸ்டின் ரனோக் ஆகிய நால்வரும் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்தனர்

இதற்கமைய குழந்தைகள் உயிருடன் இருப்பதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொலம்பிய அதிபருக்கு தகவல் கிடைத்ததும், “என்ன நடந்தாலும் சரி, எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி, குழந்தைகளை மீட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உத்தரவையடுத்து சிறுவர்களை தேடும் பணியில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டது

அதுமட்டுமின்றி குழந்தைகளை பற்றி பாட்டி பேசிய சில வார்த்தைகள் ஒலிபெருக்கி மூலம் காடு முழுவதும் ஒளிபரப்பட்டது.

தேடுதலின் போது குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாததால், தேடுதல் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் உள்ளூர் பழங்குடியின மக்களின் உதவியை நாடினர்.

பழங்குடியினரின் உதவியுடன் 40 நாட்களுக்கு பிறகு 4 சிறுவர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கொலம்பிய அதிபர் பெட்ரோ தனது ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.

மேலும் அமேசான் காட்டில் 40 நாட்களுக்கு பிறகு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதற்கு அந்நாட்டு மக்கள் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் காட்டில் தொலைந்த குழந்தைகள் 40 நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு samugammedia கொலம்பியாவின் அமேசான் காடுகளில் விமானம் விபத்துக்குள்ளானதில் 40 நாட்களுக்குப் பிறகு 4 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.இந்த 4 சிறுவர்களும்  மே 1 ஆம் திகதி, 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் ஒரு சிறிய ரக விமானம் கொலம்பியாவில் இருந்து புறப்பட்டு அமேசான் காட்டில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.விமானத்தில் பயணித்த சிறுவர்களின் தாய், விமானி உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில், லெஸ்லி ஜேகோபோம்பேர் (13), சோலோனி ஜெகோபோம்பேர் (9), டியன் ரனோக் முகுடி (4)மற்றும் கைக்குழந்தையான கிறிஸ்டின் ரனோக் ஆகிய நால்வரும் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்தனர்இதற்கமைய குழந்தைகள் உயிருடன் இருப்பதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.கொலம்பிய அதிபருக்கு தகவல் கிடைத்ததும், “என்ன நடந்தாலும் சரி, எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி, குழந்தைகளை மீட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.ஜனாதிபதியின் உத்தரவையடுத்து சிறுவர்களை தேடும் பணியில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டதுஅதுமட்டுமின்றி குழந்தைகளை பற்றி பாட்டி பேசிய சில வார்த்தைகள் ஒலிபெருக்கி மூலம் காடு முழுவதும் ஒளிபரப்பட்டது.தேடுதலின் போது குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாததால், தேடுதல் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் உள்ளூர் பழங்குடியின மக்களின் உதவியை நாடினர்.பழங்குடியினரின் உதவியுடன் 40 நாட்களுக்கு பிறகு 4 சிறுவர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.கொலம்பிய அதிபர் பெட்ரோ தனது ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.மேலும் அமேசான் காட்டில் 40 நாட்களுக்கு பிறகு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதற்கு அந்நாட்டு மக்கள் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement