• Sep 30 2024

சீனாவா? இந்தியாவா? என்று கேள்வி முன்வைக்கப்படின் இந்தியாவே எனது தெரிவில் முன்னிலையாகக் காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா! SamugamMedia

Tamil nila / Mar 2nd 2023, 5:51 pm
image

Advertisement

சீனாவா? இந்தியாவா? என்று கேள்வி முன்வைக்கப்படின்  இந்தியாவே எனது தெரிவில்  முன்னிலையாகக் காணப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் இன்றைய தினம் (02) வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

    

தொடர்ந்தும் இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,


இலங்கை, இந்தியா கடற்தொழிலாளர்களுக்கிடையிலான பிரச்சினை தொடர் கதையாகக் காணப்படுகையில் இரு தரப்பிலும் தீர்வு காணப்பட வேண்டிய தேவை உள்ளது. தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியான கலந்துரையாடல்கள் இடம்பெற்றாலும் தீரந்தபாடில்லை.


இந்தியத் தரப்பு தம் நிலைப்பாட்டிலிருந்தும் இலங்கைத்தொழிளாளர்கள் தம் நிலைப்பாட்டிலிருந்தும் மட்டுமே பிரச்சினையைத் தீர்ர்க முயல்தால் பிரச்சினை இதுவரை தீர்ந்தபாடில்லை.


நாளை கச்சதீவில் இரு தரப்பு கடற்தொழிளாளர்களின் சந்திப்பு இடம்பெறவுள்ளது. சந்திப்பானது உடனடியாகத் தீர்லைத் தராவிட்டாலும் தீர்வை  நோக்கி பயணிக்கும் முயற்சியாக அமையும்.


இந்திய மீனவர்களின்அத்துமீறிய மீன்பிடி கட்டுப்படுத்த 2017 ம் ஆண்டு மற்றும் 2018 இல் கொண்டுவரபபட்ட சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்


நாளைய தினம் இரு தரப்பினரும் கலந்துரையாடி இரு தரப்பு நிலைப்பாட்டினைப்  புரிந்துகொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு எனது  நிலைப்பாடு நடுநிலையாகக் காணப்படும்.


இந்தியா மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பரப்பின் மீனபிடிக்க அனுமதி வழங்கலானது இந்தியத் தரப்பினரின் கருத்தாகவே முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் வழமை போல் மக்களைக் குழப்பி பிரச்சினைகளைத் திசைதிருப்புவதற்காக கருத்துருவாக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


பாராளுமன்றில் சாள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் இலங்கை கடற்தொழிலாளர்களின் அனுமதியின்றி தான் இணங்கப் போவதில்லை எனவும் கூறியிருந்தார். இலங்கை கடற்தொழில் அமைச்சரின் முடிவே இறுதியானது. அது மக்கள் மற்றும் நாட்டை மையப்படுத்தியாதாக இருக்கும். இப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

அந்த வகையில் தான் அரசுடமையாக்கப்பட்ட படகுகளை நமது கடற்தொழிளாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. 


நான் எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன்சார்பாகவே இருப்பதுடன்  கடற்தொழிளாளர்களின் முடிவே இறுதியாகக் காணப்படுவதுடன் இதையே ஜனாதிபதியே ஏற்றுக்கொள்வர்.


உள்ளூர் சட்டவிரோதத் தொழில்கள் மற்றும் போதைவஸ்து தொழில்கள் மற்றும் எல்லைதாண்டி மீன்பிடித் தொழில் செய்வோரைக் கட்டுப்படுத்த கடற்தொழிற் திணைக்களத்திற்குத் துணையாகத்  தொண்டர் அணியை உருவாக்குது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

முரண்பாடுள்ள பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் முரண்பாடான தீர்மானங்களை எடுக்கவேண்டிய நிலை தோன்றும்


அதேவேளை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் நான் எடுத்த முடிவே வரலாற்று ரீதியாக யதார்த்தமாக்கப்பட்டது. அன்று எதிர்த்தவர்களும் இன்று எம் நிலைப்பாட்டுடன் இணங்கியுள்ளனர்.


வடமாகாணத்தில் 1200 க்கு மேற்பட்ட கடலட்டைப் பண்ணைகள் காணப்படுகின்றன. தென்னை,பனை போன்றவற்றிற்கு அபிவிருத்தி சபைகளைப் போல் கடலட்டை அபிவிருத்தி சபையையும் உருவாக்க எதிர்பார்த்துள்ளேன்.

தற்போதுள்ள பண்ணைகள் மூலம் பெறப்படும் வருமானத்தை எதிர்வரும் காலங்களின் பன்மடங்காக்குவதன் மூலம் நாட்டிற்கும் மக்களுக்கும் பொருளாதார ரீதியாக நன்மையடைவதாக இருக்கும். 


இன்று நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றால் பொருளாதார பிரச்சினை மற்றும் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என வெளிப்படையாக கூறியிருந்தேன். இதே போல் நிலையிலேயே ஒரு கட்டத்தில் இந்தியாவும் ஒரு கால கட்டத்தில் இருந்தது இன்று வளர்ச்சியுற்று பலமிக்க நாடாக மாறியுள்ளது. ஜனாதிபதியுடன் இணங்கிப் போனாலே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி வகுக்கும்.


சீனாவா இந்தியாவா என்று முன்வைக்கப்படின்  இந்தியாவே எனது தெரிவில்  முன்னிலையாகக் காணப்படும். போராட்டம் பல அனுபவங்களைப் பெற்றுத் தந்துள்ளது. 


தேசிய நீரோட்டத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றம் மூலமே தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றே அன்று முதல் செயற்பட்டு வருகின்றேன். ஆகையால் இன்றும் தேசிய நல்லிணக்கத்தின் வழி நின்றே செயற்படுவேன். ஆகையால் எனது ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கோ , பொதுஜனப் பெரமுனவிற்கோ காணப்படாது மக்கள் நலன் சார்ந்ததாகவே காணப்படும்.


2005 மகிந்தா ஒற்றையாட்சியை வலியுறுத்தியும் ரணில் விக்கிரமசிங்க சமஷ்டியை வலியுறுத்தியும் தேர்தலை எதிர்கொண்டனர்.  அதில் ஒறறையாட்சியை வலியுறுத்திய மகிந்த ராஜபக்சாவையே மக்கள் தெரிவு செய்தனர்.


ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவுசெய்யப்படவில்லை. ஜனநாயககத்திற்கு எதிராக தெரிவு செய்யப்பட்டார் என்றால் அந்த ஜனாதிபதித் தெரிவில் டலஸ் அழகப்பெருமவும்  சஜித் பிரேமதாசாவும் ஏன் போட்டியிட்டனர்.  எனவே எனக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை நாட்டு நலன் சா்ந்ததாகவும்  மக்கள் நலன் சார்ந்ததாகவே என்றென்றும்  பயன்படுத்திக்கொள்வேன் -  என்றார்

சீனாவா இந்தியாவா என்று கேள்வி முன்வைக்கப்படின் இந்தியாவே எனது தெரிவில் முன்னிலையாகக் காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா SamugamMedia சீனாவா இந்தியாவா என்று கேள்வி முன்வைக்கப்படின்  இந்தியாவே எனது தெரிவில்  முன்னிலையாகக் காணப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் இன்றைய தினம் (02) வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.    தொடர்ந்தும் இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,இலங்கை, இந்தியா கடற்தொழிலாளர்களுக்கிடையிலான பிரச்சினை தொடர் கதையாகக் காணப்படுகையில் இரு தரப்பிலும் தீர்வு காணப்பட வேண்டிய தேவை உள்ளது. தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியான கலந்துரையாடல்கள் இடம்பெற்றாலும் தீரந்தபாடில்லை.இந்தியத் தரப்பு தம் நிலைப்பாட்டிலிருந்தும் இலங்கைத்தொழிளாளர்கள் தம் நிலைப்பாட்டிலிருந்தும் மட்டுமே பிரச்சினையைத் தீர்ர்க முயல்தால் பிரச்சினை இதுவரை தீர்ந்தபாடில்லை.நாளை கச்சதீவில் இரு தரப்பு கடற்தொழிளாளர்களின் சந்திப்பு இடம்பெறவுள்ளது. சந்திப்பானது உடனடியாகத் தீர்லைத் தராவிட்டாலும் தீர்வை  நோக்கி பயணிக்கும் முயற்சியாக அமையும்.இந்திய மீனவர்களின்அத்துமீறிய மீன்பிடி கட்டுப்படுத்த 2017 ம் ஆண்டு மற்றும் 2018 இல் கொண்டுவரபபட்ட சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்நாளைய தினம் இரு தரப்பினரும் கலந்துரையாடி இரு தரப்பு நிலைப்பாட்டினைப்  புரிந்துகொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு எனது  நிலைப்பாடு நடுநிலையாகக் காணப்படும்.இந்தியா மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பரப்பின் மீனபிடிக்க அனுமதி வழங்கலானது இந்தியத் தரப்பினரின் கருத்தாகவே முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் வழமை போல் மக்களைக் குழப்பி பிரச்சினைகளைத் திசைதிருப்புவதற்காக கருத்துருவாக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர்.பாராளுமன்றில் சாள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் இலங்கை கடற்தொழிலாளர்களின் அனுமதியின்றி தான் இணங்கப் போவதில்லை எனவும் கூறியிருந்தார். இலங்கை கடற்தொழில் அமைச்சரின் முடிவே இறுதியானது. அது மக்கள் மற்றும் நாட்டை மையப்படுத்தியாதாக இருக்கும். இப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது.அந்த வகையில் தான் அரசுடமையாக்கப்பட்ட படகுகளை நமது கடற்தொழிளாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. நான் எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன்சார்பாகவே இருப்பதுடன்  கடற்தொழிளாளர்களின் முடிவே இறுதியாகக் காணப்படுவதுடன் இதையே ஜனாதிபதியே ஏற்றுக்கொள்வர்.உள்ளூர் சட்டவிரோதத் தொழில்கள் மற்றும் போதைவஸ்து தொழில்கள் மற்றும் எல்லைதாண்டி மீன்பிடித் தொழில் செய்வோரைக் கட்டுப்படுத்த கடற்தொழிற் திணைக்களத்திற்குத் துணையாகத்  தொண்டர் அணியை உருவாக்குது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.முரண்பாடுள்ள பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் முரண்பாடான தீர்மானங்களை எடுக்கவேண்டிய நிலை தோன்றும்அதேவேளை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் நான் எடுத்த முடிவே வரலாற்று ரீதியாக யதார்த்தமாக்கப்பட்டது. அன்று எதிர்த்தவர்களும் இன்று எம் நிலைப்பாட்டுடன் இணங்கியுள்ளனர்.வடமாகாணத்தில் 1200 க்கு மேற்பட்ட கடலட்டைப் பண்ணைகள் காணப்படுகின்றன. தென்னை,பனை போன்றவற்றிற்கு அபிவிருத்தி சபைகளைப் போல் கடலட்டை அபிவிருத்தி சபையையும் உருவாக்க எதிர்பார்த்துள்ளேன்.தற்போதுள்ள பண்ணைகள் மூலம் பெறப்படும் வருமானத்தை எதிர்வரும் காலங்களின் பன்மடங்காக்குவதன் மூலம் நாட்டிற்கும் மக்களுக்கும் பொருளாதார ரீதியாக நன்மையடைவதாக இருக்கும். இன்று நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றால் பொருளாதார பிரச்சினை மற்றும் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என வெளிப்படையாக கூறியிருந்தேன். இதே போல் நிலையிலேயே ஒரு கட்டத்தில் இந்தியாவும் ஒரு கால கட்டத்தில் இருந்தது இன்று வளர்ச்சியுற்று பலமிக்க நாடாக மாறியுள்ளது. ஜனாதிபதியுடன் இணங்கிப் போனாலே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி வகுக்கும்.சீனாவா இந்தியாவா என்று முன்வைக்கப்படின்  இந்தியாவே எனது தெரிவில்  முன்னிலையாகக் காணப்படும். போராட்டம் பல அனுபவங்களைப் பெற்றுத் தந்துள்ளது. தேசிய நீரோட்டத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றம் மூலமே தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றே அன்று முதல் செயற்பட்டு வருகின்றேன். ஆகையால் இன்றும் தேசிய நல்லிணக்கத்தின் வழி நின்றே செயற்படுவேன். ஆகையால் எனது ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கோ , பொதுஜனப் பெரமுனவிற்கோ காணப்படாது மக்கள் நலன் சார்ந்ததாகவே காணப்படும்.2005 மகிந்தா ஒற்றையாட்சியை வலியுறுத்தியும் ரணில் விக்கிரமசிங்க சமஷ்டியை வலியுறுத்தியும் தேர்தலை எதிர்கொண்டனர்.  அதில் ஒறறையாட்சியை வலியுறுத்திய மகிந்த ராஜபக்சாவையே மக்கள் தெரிவு செய்தனர்.ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவுசெய்யப்படவில்லை. ஜனநாயககத்திற்கு எதிராக தெரிவு செய்யப்பட்டார் என்றால் அந்த ஜனாதிபதித் தெரிவில் டலஸ் அழகப்பெருமவும்  சஜித் பிரேமதாசாவும் ஏன் போட்டியிட்டனர்.  எனவே எனக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை நாட்டு நலன் சா்ந்ததாகவும்  மக்கள் நலன் சார்ந்ததாகவே என்றென்றும்  பயன்படுத்திக்கொள்வேன் -  என்றார்

Advertisement

Advertisement

Advertisement