• Sep 29 2024

சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு அதிரடியாக சீல் வைப்பு..! samugammedia

Chithra / Oct 31st 2023, 1:03 pm
image

Advertisement

 

பிலியந்தலை நகரில் உள்ள போகுந்தர கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான "சிபெட்கோ" எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை இலங்கை பெட்ரோலிய ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தின் நுகேகொட பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - ஹொரணை 120 பேருந்து வழித்தடத்தில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள பொகுந்தர கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான சிபெட்கோ பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதன்படி, நுகேகொடை பிராந்திய அலுவலகத்தின் பகுதி முகாமையாளர் டொன் பிரசன்ன டிலிருக் ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று (30.10.2023) இரவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து எரிபொருள் நிலையத்திலுள்ள அனைத்து பம்புகளும் சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு அதிரடியாக சீல் வைப்பு. samugammedia  பிலியந்தலை நகரில் உள்ள போகுந்தர கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான "சிபெட்கோ" எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தகவலை இலங்கை பெட்ரோலிய ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தின் நுகேகொட பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.எரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு - ஹொரணை 120 பேருந்து வழித்தடத்தில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள பொகுந்தர கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான சிபெட்கோ பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.அதன்படி, நுகேகொடை பிராந்திய அலுவலகத்தின் பகுதி முகாமையாளர் டொன் பிரசன்ன டிலிருக் ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று (30.10.2023) இரவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து எரிபொருள் நிலையத்திலுள்ள அனைத்து பம்புகளும் சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement