பாடசாலை மாணவர்களிடையே மோதல்:மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

பயாகல பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றின் இரண்டு உயர்தர வகுப்பு மாணவர்களுக்கிடையில் இன்று (23) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த மூன்று மாணவர்கள் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

பயாகல, மதியலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மூன்று மாணவர்களின் தலை, கை மற்றும் முகத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், அவர்கள் 1990 சுவசார்யா ஆம்புலன்சில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஹெல்மெட் மற்றும் கைகளால் உதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்டோர் தாக்குதலுக்கு உள்ளாகி சிறு காயங்களுடன் வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை இரண்டு பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை