• Mar 29 2024

காலநிலையில் ஏற்படும் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Chithra / Jan 28th 2023, 6:50 pm
image

Advertisement

காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் குறித்த கடற்பரப்புக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளது.


குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக கரையோரப் பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் வரும் 31ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, பெப்ரவரி முதலாம் திகதி நாட்டின் கிழக்கு கடற்கரையை நெருங்கும் என வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.


காலநிலையில் ஏற்படும் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் குறித்த கடற்பரப்புக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளது.குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக கரையோரப் பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் வரும் 31ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, பெப்ரவரி முதலாம் திகதி நாட்டின் கிழக்கு கடற்கரையை நெருங்கும் என வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement