ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்காக பெறப்பட்ட வெளிநாட்டு கடகள் அரசாங்கத்தின் எந்தவொரு வைப்பு கணக்குகளிலும் உள்வாங்கப்படவில்லை என கோப் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துறைமுக அதிகார சபையின் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் நடைமுறை செயலாற்றுகை தொடர்பில் கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் தலைமையில் 22 ஆம் திகதி கோப்குழு கூடியிருந்த நிலையில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடகாலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கியதன் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொண்ட கடனை செலுத்த பயன்படுத்தவில்லை.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிப்பிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் இதுவரை உள்வாங்கப்படவில்லை கோப்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
நிதியமைச்சு, துறைமுக அதிகார சபையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் உரிய ஆவணப்படுத்தலுடன் கணக்குகளை தயாரித்து கோப் குழுவிற்கு அறிக்கை சமர்பிக்குமாறு கோப்குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய 2017ஆம் ஆண்டு 99 வருடகாலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட போது கிடைக்கப்பெற்ற நிதி மற்றும் மிகுதி கடன் பகுதி துறைமுக அதிகார சபையினால் திறைச்சேரிக்கு வழங்கப்பட்டதாகவும்,கடன் வட்டி வீதம் குறைவடைந்துள்ளதுடன், துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை மீள் செலுத்தாமல் திறைச்சேரியினால் அரச செலவுகளுக்காக அந்நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தப்பட்டது.
மத்திய திறைச்சேரியினால் இதுவரை கடன் மற்றும் வட்டி செலுத்தப்பட்டிருந்தாலும், அது வைப்பு அடிப்படையில் செலுத்தப்பட்ட கடனாக குறிப்பிடப்படவில்லை எனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிப்பிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் இதுவரை உள்வாங்கப்படவில்லை என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- திருகோணமலை IOC நிலையத்தில் பதற்றம்! (படங்கள் இணைப்பு)
- பொருளாதார தடைகள் உலகை ஆயுத அடிமையாக்குகிறது! சீன அதிபர்
- கறுப்பு சந்தை வியாபாரிகளால் யாழ் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது! அங்கஜன் காட்டம்!
- அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்ற முடியுமா?
- ராயல் பார்க் கொலையாளியிடம் பணம் பெற்றது யாரோ! பழி எனக்கா? மைத்திரி ஆவேசம்
- வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!