கொழும்புத்துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி இந்தியாவிடம்; கோட்டா- ஊழியர்கள் சந்திப்பு

83

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியில் 49 சதவீத பங்குகள் மாத்திரமே இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருக்குமென ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ச துறைமுக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

51 சதவீத பங்குகள் இலங்கை அரசாங்கதிடம் இருக்குமெனவும் அதனால் ஊழியர்கள் அச்சமடைய வேண்டிய தேவையில்லை எனவும் கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியை இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் துறைமுக ஊழியர் சங்கம் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.

இன்று புதன்கிழமை ஊழியர் சங்கப் பிரதிநிதிகளோடு பேச்சு நடத்தியபோதே கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு கூறினார். இந்தியா, ஜ்ப்பான் ஆகிய நாடுகள் இலங்கையுடன் இணைந்து கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் 2018 ஆம் கைச்சாத்திடப்பட்டிருந்து.

அபிவிருத்திச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அங்கீகாரம் கடந்த மாதம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்துத் துறைமுக ஊழியர்கள் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் இன்று சந்திப்பு இடம்பெற்றது.

இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்து சென்றிருந்த நிலையில் துறைமுக ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: