நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி

279

லண்டன் சென்று திரும்பிய நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 தினங்களாக லண்டனில் இருந்த வடிவேலு, நேற்று சென்னை திரும்பினார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, அவர் சென்னை போரூரில் பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.