கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடன் விரைவில் உடன்படிக்கை

117

கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்காக மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் விரைவில் உடன்படிக்கை செய்து கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை இதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. பைஸர் நிறுவனத்தினூடாக 7 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மொடேனாஇ ஜோன்ஸ்சன் அன்ட் ஜோன்ஸ்சன் போன்ற நிறுவனங்களுடனும் அமெரிக்க தூதரகத்தின் ஒருங்கிணைப்புடனும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: