கரீனா கபூருக்கு எதிராக முறைப்பாடு: காரணம் இதுதான்

232

நடிகை கரீனா கபூருக்கு கடந்த பெப்ரவரி மாதம் இரண்டாவதாக ஆண் குழந்தையொன்று பிறந்தது.

இந்நிலையில் தனது கர்ப்பகால அனுபவங்களை தொகுத்து கரீனா கபூர் ‘பிரெக்னன்சி பைபிள்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி, அதனை கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெளியிட்டார்.

அந்த புத்தகத்தை அவர் தனது மூன்றாவது குழந்தை என குறிப்பிட்டுள்ளார்.

இப்புத்தகத்தின் தலைப்புக்கு ‘பைபிள்’ என்ற வாசகத்தை பயன்படுத்தியுள்ளமை கிறிஸ்தவ மத நம்பிக்கையை அவமதிப்பதாக அமைந்துள்ளது என ‘அல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங்’ என்ற அமைப்பு மராட்டிய மாநிலத்திலுள்ள காவல் நிலையமொன்றில் முறைப்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து குறித்த காவல் நிலையத்தின் காவல்துறை அதிகாரி சாய்நாத் தோம்ரே தெரிவிக்கையில், ‘நாங்கள் குறித்த முறைப்பாடை பெற்றுக்கொண்டோம்.

இருப்பினும் சம்பவம் இங்கு நடக்காததால் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவில்லை.

மும்பை சென்று முறைப்பாடு அளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களை அறிவுறுத்தியுள்ளோம்’ என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: