• Mar 29 2024

இந்திய போதகர் குழுவின் கடவுச்சீட்டு பறிமுதல்: மறவன்புலவு க.சச்சிதானந்தன் கருத்து!SamugamMedia

Sharmi / Mar 23rd 2023, 11:03 pm
image

Advertisement

சமாதானமாக உள்ள யாழ்ப்பாண மண்ணில் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படலாம்  என  கருதுவதால் நாளைய நிகழ்வினை தவிர்க்க தீர்மானித்துள்ளோம் என ஏஞ்சல்  இன்ரநசனல் பாடசாலை வளாகத்தில்   இடம்பெறவிருந்த கிறிஸ்வ இறை ஆசீர்வாத நிகழ்வில் கலந்து கொள்ள   இன்றைய தினம்(23) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தென்னிந்திய போதகர் அடங்கிய குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிவசேனை அமைப்பினரால் நாளைய தினம்மானிப்பாயில் இடம் பெற விருந்த இறை ஆசீர்வாத நிகழ்வினை நடத்தக் கூடாது எனவும் அதற்கு தடை விதிக்க கோரி பல முயற்சிகள் எடுக்கப்பட்டதற்கு இணங்க இன்று மாலை பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த தென்னிந்திய போதகர் அடங்கிய குழுவினர்  நீண்ட நேரம் விசாரணைக்கு ட்படுத்தப்பட்டு   யாழ்ப்பாணத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும்  நாளை தினம் மானிப்பாயில் இடம் பெற உள்ள நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்கள் என பாதிரிமார்  தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

தங்களிடமிருந்து  கடவுச்சீட்டு பறிமுதல்செய்யப்படவுமில்லை நாளைய தினம் காலை 10 மணிக்கு கொழும்பு குடிவரவு அலுவலகத்திற்கு நேரில் வந்து சந்திக்க  பணிக்கப்பட்டமையையும்  மறுத்துள்ளதோடு அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை எனவும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

சிவ சேனையின் கோரிக்கையை ஏற்ற அரசு மதமாற்றி பால் தினகரன் குழுவைத் திருப்பி அனுப்பியது.எனவே நாளை(24) மானிப்பாயில் சிவ சேனையின் போராட்டம் நடைபெறாது.

மத மாற்றிகளான பின்வரும் எண்மரும் இன்று 23.3.2023 வியாழன் மாலை 4 20 மணிக்கு பலாலி வானூர்தி நிலையத்தை வந்து அடைந்தனர்.

1 திருமதி எவாஞ்சலின் பால் தினகரன் இந்தியர்
2 திரு. சாமுவேல் பால் தினகரன் அமெரிக்கர்
3 செல்வி ஸ்டெல்லா இரமோலா தினகரன் அமெரிக்கர்
4 செல்வி. யோகினி வசந்தகுமார் இலங்கையர்
5 திரு. பால் தினகரன் இந்தியர்
6 திரு. உலூக் பெர்னார்டர் யோர்ச்சர் இந்தியன்
7 திரு. இரத்தினகுமார் ஆசீர்வதம் இந்தியர்
8 திரு. இரெசி இடேனியல் பால்ராசர் இந்தியன்.

இவர்கள் எண்மரும் வந்த உடனேயே கொழும்பில் இருந்து இந்தப் பணிக்காகவே விரைந்து வந்த இலங்கை அரசின் குடிவரவுத் திணைக்கள நடவடிக்கைக் குழு வானூர்தியகத்தில் தனி அறைக்கு அழைத்துச் சென்றது.

மாலை 0430 தொடக்கம் இரவு 0830 வரை நான்கு மணி நேரம் எவருடைய தொடர்பு இல்லாமல் அறைகளுக்குள் அடைந்து கிடந்தனர். ஒவ்வொருவராக விவர அறிக்கையைக் குடிவரவுத் துறை அலுவலர்களுக்குக் கொடுத்தனர்.

இவர்களுள் பலரின் கடவுச் சீட்டுகளைக் கைப்பற்றிய குடிவரவுத் திணைக்கள அலுவலர்கள், நாளை வெள்ளிக்கிழமை 24.03.2023 காலை 10மணிக்கு கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு திணைக்கள அலுவலகத்திற்கு நேரே வந்து சேருமாறு ஆணையிட்டுச் சென்றனர்.

மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணக் கூட்டங்களில் எவராவது பேச முயன்றாலோ பங்குபற்ற முயன்றாலோ உடனே கைதாகுவர் என்றும் குடிவரவுத் துறை அலுவலர்கள் எச்சரித்தனர்.

மதமாற்றி பால் தினகரனின் குழுவினர் நேரே யாழ் நகர் வந்தனர், தொடர்வண்டி நிலையத்துக்கு முன்புள்ள வடக்கு வாயில் North Gate உல்லாச விடுதியில் உணவு அருந்திக்கொண்டு இருக்கின்றனர். இரவே கொழும்புக்கு புறப்படுகிறார்கள் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய போதகர் குழுவின் கடவுச்சீட்டு பறிமுதல்: மறவன்புலவு க.சச்சிதானந்தன் கருத்துSamugamMedia சமாதானமாக உள்ள யாழ்ப்பாண மண்ணில் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படலாம்  என  கருதுவதால் நாளைய நிகழ்வினை தவிர்க்க தீர்மானித்துள்ளோம் என ஏஞ்சல்  இன்ரநசனல் பாடசாலை வளாகத்தில்   இடம்பெறவிருந்த கிறிஸ்வ இறை ஆசீர்வாத நிகழ்வில் கலந்து கொள்ள   இன்றைய தினம்(23) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தென்னிந்திய போதகர் அடங்கிய குழுவினர் தெரிவித்துள்ளனர்.சிவசேனை அமைப்பினரால் நாளைய தினம்மானிப்பாயில் இடம் பெற விருந்த இறை ஆசீர்வாத நிகழ்வினை நடத்தக் கூடாது எனவும் அதற்கு தடை விதிக்க கோரி பல முயற்சிகள் எடுக்கப்பட்டதற்கு இணங்க இன்று மாலை பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த தென்னிந்திய போதகர் அடங்கிய குழுவினர்  நீண்ட நேரம் விசாரணைக்கு ட்படுத்தப்பட்டு   யாழ்ப்பாணத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும்  நாளை தினம் மானிப்பாயில் இடம் பெற உள்ள நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்கள் என பாதிரிமார்  தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.தங்களிடமிருந்து  கடவுச்சீட்டு பறிமுதல்செய்யப்படவுமில்லை நாளைய தினம் காலை 10 மணிக்கு கொழும்பு குடிவரவு அலுவலகத்திற்கு நேரில் வந்து சந்திக்க  பணிக்கப்பட்டமையையும்  மறுத்துள்ளதோடு அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை எனவும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.இதேவேளை சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,சிவ சேனையின் கோரிக்கையை ஏற்ற அரசு மதமாற்றி பால் தினகரன் குழுவைத் திருப்பி அனுப்பியது.எனவே நாளை(24) மானிப்பாயில் சிவ சேனையின் போராட்டம் நடைபெறாது.மத மாற்றிகளான பின்வரும் எண்மரும் இன்று 23.3.2023 வியாழன் மாலை 4 20 மணிக்கு பலாலி வானூர்தி நிலையத்தை வந்து அடைந்தனர்.1 திருமதி எவாஞ்சலின் பால் தினகரன் இந்தியர்2 திரு. சாமுவேல் பால் தினகரன் அமெரிக்கர்3 செல்வி ஸ்டெல்லா இரமோலா தினகரன் அமெரிக்கர்4 செல்வி. யோகினி வசந்தகுமார் இலங்கையர்5 திரு. பால் தினகரன் இந்தியர்6 திரு. உலூக் பெர்னார்டர் யோர்ச்சர் இந்தியன்7 திரு. இரத்தினகுமார் ஆசீர்வதம் இந்தியர்8 திரு. இரெசி இடேனியல் பால்ராசர் இந்தியன்.இவர்கள் எண்மரும் வந்த உடனேயே கொழும்பில் இருந்து இந்தப் பணிக்காகவே விரைந்து வந்த இலங்கை அரசின் குடிவரவுத் திணைக்கள நடவடிக்கைக் குழு வானூர்தியகத்தில் தனி அறைக்கு அழைத்துச் சென்றது.மாலை 0430 தொடக்கம் இரவு 0830 வரை நான்கு மணி நேரம் எவருடைய தொடர்பு இல்லாமல் அறைகளுக்குள் அடைந்து கிடந்தனர். ஒவ்வொருவராக விவர அறிக்கையைக் குடிவரவுத் துறை அலுவலர்களுக்குக் கொடுத்தனர்.இவர்களுள் பலரின் கடவுச் சீட்டுகளைக் கைப்பற்றிய குடிவரவுத் திணைக்கள அலுவலர்கள், நாளை வெள்ளிக்கிழமை 24.03.2023 காலை 10மணிக்கு கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு திணைக்கள அலுவலகத்திற்கு நேரே வந்து சேருமாறு ஆணையிட்டுச் சென்றனர்.மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணக் கூட்டங்களில் எவராவது பேச முயன்றாலோ பங்குபற்ற முயன்றாலோ உடனே கைதாகுவர் என்றும் குடிவரவுத் துறை அலுவலர்கள் எச்சரித்தனர்.மதமாற்றி பால் தினகரனின் குழுவினர் நேரே யாழ் நகர் வந்தனர், தொடர்வண்டி நிலையத்துக்கு முன்புள்ள வடக்கு வாயில் North Gate உல்லாச விடுதியில் உணவு அருந்திக்கொண்டு இருக்கின்றனர். இரவே கொழும்புக்கு புறப்படுகிறார்கள் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement