• Mar 29 2024

இந்தியா, வங்கதேசத்துடன் இன்று மோதல்!

crownson / Dec 7th 2022, 10:15 am
image

Advertisement

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

மிர்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்று, 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரண்டாவது போட்டி இதே மைதானத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி, இந்திய அணியில் 2 மாற்றங்களுக்கு வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை வலுவான பேட்டிங் வரிசையை கொண்டிருந்த போதும், முதல் போட்டியில் முன்னணி வீரர்கள் சொதப்பினர்.

மேலும், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் இந்தியா பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில், வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் இந்தியா களமிறங்குகிறது.

மேலும், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் இப்போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

அதேவேளையில், சொந்த மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து, இரண்டாவது முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்ற வங்கதேச அணியும் தீவிரம் காட்டி வருகிறது.

வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.

இந்தியா, வங்கதேசத்துடன் இன்று மோதல் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.மிர்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்று, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரண்டாவது போட்டி இதே மைதானத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி, இந்திய அணியில் 2 மாற்றங்களுக்கு வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.இந்திய அணியை பொறுத்தவரை வலுவான பேட்டிங் வரிசையை கொண்டிருந்த போதும், முதல் போட்டியில் முன்னணி வீரர்கள் சொதப்பினர். மேலும், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் இந்தியா பின்னடைவை சந்தித்தது.இந்நிலையில், வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. மேலும், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் இப்போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது.அதேவேளையில், சொந்த மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து, இரண்டாவது முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்ற வங்கதேச அணியும் தீவிரம் காட்டி வருகிறது.வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.

Advertisement

Advertisement

Advertisement