• Dec 01 2022

நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Chithra / 2 months ago
image

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நால்லூரில் அமைந்துள்ள, அவரின் நினைவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.

நினைவேந்தலுக்காக பொது அமைப்புக்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அஞ்சலி செலுத்துவதற்காக காவடிகளும் நல்லூருக்கு வந்திருந்தன.

காவடியுடன் வருகை தரும் நபர்களுக்கு வழி விடுமாறு கோரிய நிலையில், அங்கே ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இழுபறி நிலை ஒன்று காணப்பட்டது.

இதனை அடுத்து தீபம் ஒன்று கீழே வீழ்ந்து, ஏற்பட்ட விபத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதனை அடுத்து நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்