• Apr 18 2024

மீண்டும் தேசிய சாதனை படைத்த சிங்கப் பெண்-குவியும் பாராட்டுக்கள்!samugammedia

Sharmi / Apr 1st 2023, 5:04 pm
image

Advertisement

தேசிய ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மேலுமொரு தேசிய சாதனையை பதிவு செய்துள்ளார்.

இன்று பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியப் பொதுத்திடல் தடப் போட்டியிலே பெண்களுக்கான 100 மீட்டர் இறுதிச் சுற்றில் பெரேரா வெற்றி பெற்றுள்ளார்.

அதில் அவர் 11.37 விநாடிகள் என்ற புதிய தேசிய சாதனை நேரத்தைப் பதிவுசெய்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இதற்கு முன்னர் நேற்று வெள்ளிக்கிழமை (31 மார்ச்) ஓட்டப் பந்தயத்தில் அவர் 11.38 விநாடிகள் நேரத்தைப் பதிவு செய்திருந்தார்.

அந்த ஓட்டத்தில் 2 ஆவது மற்றும் 3 ஆவது இடங்களை ஆஸ்திரேலிய ஓட்டப்பந்தய வீராங்கனைகள் தட்டி சென்றுள்ளனர்.

சென்ற வாரம் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச் சுற்றில் மூன்றாம் இடத்தைப் பிடித்த பெரேரா, 23.16 விநாடிகளில் ஓட்டத்தை முடித்து தேசிய சாதனையைப் பதிவு செய்தார்.

26 வயதுடைய  பெரேரா இன்று மீண்டும் தேசிய சாதனை படைத்துள்ளதுடன், போட்டிகளுக்காக ஜனவரி மாதம் முதல் முழு வீச்சில் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மீண்டும் தேசிய சாதனை படைத்த சிங்கப் பெண்-குவியும் பாராட்டுக்கள்samugammedia தேசிய ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மேலுமொரு தேசிய சாதனையை பதிவு செய்துள்ளார். இன்று பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியப் பொதுத்திடல் தடப் போட்டியிலே பெண்களுக்கான 100 மீட்டர் இறுதிச் சுற்றில் பெரேரா வெற்றி பெற்றுள்ளார். அதில் அவர் 11.37 விநாடிகள் என்ற புதிய தேசிய சாதனை நேரத்தைப் பதிவுசெய்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.இதற்கு முன்னர் நேற்று வெள்ளிக்கிழமை (31 மார்ச்) ஓட்டப் பந்தயத்தில் அவர் 11.38 விநாடிகள் நேரத்தைப் பதிவு செய்திருந்தார்.அந்த ஓட்டத்தில் 2 ஆவது மற்றும் 3 ஆவது இடங்களை ஆஸ்திரேலிய ஓட்டப்பந்தய வீராங்கனைகள் தட்டி சென்றுள்ளனர். சென்ற வாரம் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச் சுற்றில் மூன்றாம் இடத்தைப் பிடித்த பெரேரா, 23.16 விநாடிகளில் ஓட்டத்தை முடித்து தேசிய சாதனையைப் பதிவு செய்தார்.26 வயதுடைய  பெரேரா இன்று மீண்டும் தேசிய சாதனை படைத்துள்ளதுடன், போட்டிகளுக்காக ஜனவரி மாதம் முதல் முழு வீச்சில் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement