ஆரியின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய நிஷா-கடுப்பில் அர்ச்சனா செய்த காரியம்!

18831

பிக்பாஸில் வெற்றியாளராக வந்த ஆரிக்கு நிஷா வாழ்த்துக்கூறி வெளியிட்ட கருத்தினை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ரியோ, நிஷா, கேப்ரில்லா, சோம் ஆகியோர் அர்ச்சனாவுடன் சேர்ந்து லவ் பேட் என்ற குழுவையும் ஆரம்பித்தனர்.

ஆனால், இந்த குழுவில் இருந்த யாரும் டாப் இரண்டு இடங்களை பிடிக்கவில்லை என்பது தான் சோகம். அதிலும் அர்ச்சனா மற்றும் நிஷா செய்த அன்பு பஞ்சாயத்து பலரையும் வெறுப்பில் ஆழ்த்தியது.

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அர்ச்சனா மற்றும் நிஷாவின் பல செயலை பலரும் சமூக வலைதளத்தில் கேலி செய்தனர்.

மேலும், இதை பல்வேறு மீம் வெளியிட்டு கலாய்த்தும் வந்தனர்.

அதே போல அர்ச்சனா உள்ளே இருந்த போது நிஷாவிடம் அன்பு ஜெய்க்கும்னு நம்புறயா என்று ஆவேசமாக கேட்ட வீடியோ கூட அந்த சமயத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளானது.

அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவரது ஓவரான அன்பு ஸ்டரட்ர்ஜி தான் என்று பலரும் கூறி வந்தனர்.

சமூக வலைதளத்தில் இதே விஷயத்தை குறிப்பிட்டு பலரும் அர்ச்சனாவை கேலி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆரி பட்டத்தை ஜெயித்து நான்கு நாட்கள் கழித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிஷாவை பலரும் கடுமையாக விமர்சனம் செய்ததால் கமெண்டை ஆப் செய்துவிட்டார்.

இதே போன்று ரசிகரின் வெறுப்பினை தாங்கிக்கொள்ளமுடியாத அர்ச்சனாவும் இடையில் சமூகவலைத்தளங்களிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: