தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் கைது- சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் காண்டீபன்

76

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் வாகரை துயிலும் இல்லப்பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்

மாவீரர் நினைவேந்தல் நினைவுகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீவிரமாக பணிகளை மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் சமூகம் மீடியாவுக்கு தெரிவித்தார்.