கடந்த 3ம் திகதி வடமராட்சி கிழக்கு தளையடியில் பாராளுமன்ற உறுப்பினர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் இடம்பெற்ற
தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி திருமதி சற்குணதேவி ஜெகதீஸ்வரன் இன்று
காலை கைது செய்யப்பட்ட நிலையில் மற்றுமொரு செயற்பாட்டாளரான உதயசிவம்
சற்றுமுன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
செயற்பாட்டாளரான உதயசிவம் என்பவர் வற்றாப்பளை கோயில் வளாகத்தில் வைத்து மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வற்றாப்பளை கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த சென்ற வேளையில் கோயில் வளாகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், க.சுகாஷ் குறிப்பிடுகையில்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக அரச அராஜகம் திட்டமிட்டு இலக்குவைத்து அரங்கேற்றப்படுகின்றது.
மூன்று
மாதங்களில் முப்பதாவது கைது அரங்கேறியுள்ளது.
எமது செயற்பாட்டாளர்
ஜெ.சற்குணதேவி (அருள்மதி) இன்று அதிகாலை மருதங்கேணிப்
பொலீசாரினால் காரணமின்றிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தாக்கிச் சுட முயன்ற பொலீசாரும் இதே பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மீண்டும்
கூறுகின்றோம், கைதுகளுக்கு அஞ்சிக் கொள்கையைக் கைவிட எம்மோடு நிற்பவர்கள்
சோற்றுக்காகவோ போத்தலுக்காகவோ வந்தவர்களல்லர் எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் கைதுகள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றுமொரு செயற்பாட்டாளர் சற்றுமுன் கைது.samugammedia கடந்த 3ம் திகதி வடமராட்சி கிழக்கு தளையடியில் பாராளுமன்ற உறுப்பினர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் இடம்பெற்ற
தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி திருமதி சற்குணதேவி ஜெகதீஸ்வரன் இன்று
காலை கைது செய்யப்பட்ட நிலையில் மற்றுமொரு செயற்பாட்டாளரான உதயசிவம்
சற்றுமுன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
செயற்பாட்டாளரான உதயசிவம் என்பவர் வற்றாப்பளை கோயில் வளாகத்தில் வைத்து மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வற்றாப்பளை கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த சென்ற வேளையில் கோயில் வளாகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், க.சுகாஷ் குறிப்பிடுகையில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக அரச அராஜகம் திட்டமிட்டு இலக்குவைத்து அரங்கேற்றப்படுகின்றது.மூன்று
மாதங்களில் முப்பதாவது கைது அரங்கேறியுள்ளது.எமது செயற்பாட்டாளர்
ஜெ.சற்குணதேவி (அருள்மதி) இன்று அதிகாலை மருதங்கேணிப்
பொலீசாரினால் காரணமின்றிக் கைது செய்யப்பட்டுள்ளார்.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தாக்கிச் சுட முயன்ற பொலீசாரும் இதே பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதுமீண்டும்
கூறுகின்றோம், கைதுகளுக்கு அஞ்சிக் கொள்கையைக் கைவிட எம்மோடு நிற்பவர்கள்
சோற்றுக்காகவோ போத்தலுக்காகவோ வந்தவர்களல்லர் எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.