கொரோனா உயிரிழப்புக்கள் மீண்டும் அதிகரிப்பு!

242

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் நேற்று உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,640 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 536,496 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 503,703 ஆக அதிகரித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: